இந்து டாக்கீஸ்

ஆடை மேடை: மனைவியின் தேர்வு

செய்திப்பிரிவு

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. இந்தப் படத்தில் விஜயின் அறிமுகப் பாடலைத் திருப்பதிக்கு அருகிலுள்ள தலக்கோணத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.

தனது படங்களின் வெளியீட்டு நேரத்தில் நடத்தப்படும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு விஜய் வருகிறாரோ இல்லையோ, நண்பர்கள் அழைத்தால் திரை விழாக்களில் தவறாமல் பங்கெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

திரை விழாக்கள், ரசிகர்களுடன் நடக்கும் சந்திப்பு, பாடல் பதிவுக் கூடத்துக்கு வருவது, பிள்ளைகளைப் பள்ளியில் விடச் செல்வது எனப் படப்பிடிப்புக்கு வெளியேயும் விஜயைக் காணலாம்.

இது போன்ற சமயங்களில் வெளிர் நீல நீற ஜீன்ஸ் அல்லது கறுப்பு வண்ண ஜீன்ஸ் அணிந்து அந்த வண்ணங்களுக்கு எதிரிடையான வண்ணத்தில் செமி கேஷுவல் ஃபுல் ஸ்லீவ் சட்டைகள் அணிந்து கைகளை மடித்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஆடைக்கு ஏற்ற மாதிரி ப்ளைன் அல்லது சன் கிளாஸ் அணிந்துவரும் விஜய், மேடையில் அமரும்போது கண்ணாடியை மடக்கிச் சட்டையில் ஸ்டைலாகச் சொருகிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

திரையில் இளமை துள்ளும் டி.ஷர்ட்களை அணியும் விஜய் பொது விழாக்களுக்கு அவற்றை அணிவதில்லை. விஜயின் ஆடைகள் அனைத்தையும் தேர்வு செய்பவர் அவருடைய மனைவி.

SCROLL FOR NEXT