இந்து டாக்கீஸ்

பாலிவுட் வாசம்: அசின் - இரண்டாவது இன்னிங்ஸ்

ஆர்.சி.ஜெயந்தன்

மொத்த கோலிவுட்டும் கடுப்படிக்க, கடந்த 2009-ல் ஆண்டில் இலங்கை சென்று ராஜபக்சேவுடன் கைகுலுக்கி விருந்து சாப்பிட்ட அசினை இங்கே மொத்தமாகக் கைவிட்டுவிட்டார்கள். அசினுக்கு நெருக்கமான இயக்குநர்கள் அவர் எண்ணைத் தங்கள் மொபைலில் இருந்து நீக்கிவிடும் அளவுக்குச் சிக்கலைக் கொடுத்துவிட்டு பாலிவுட்டுக்குப் போனார். அதன் பிறகு தமிழ் ரசிகர்களும் சுட்டும் விழிச் சுடரை மறந்து போனார்கள்.

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக மாறிய பின்னர் ‘பார்ட்டி அனிமல்’ ஆகிவிட்ட அசினுக்குச் சில படங்கள் தோல்வி, சில படங்கள் வெற்றி என்ற நிலை. இதற்கிடையில் தற்போது தெலுங்கில் இருந்து பாலிவுட்டுக்கு இடம்பெயர்ந்த இலியானா, ஸ்ருதி ஹாஸன், தமன்னா ஆகியோர் அசினை அடுத்த இடத்துக்கு தள்ளிவிட்டார்கள். போட்டியில் நிலைக்க உடம்பைக் குறைத்துப் பார்த்தார். அப்படியும் வாய்ப்பு வராத நிலை, கடைசிவரை பெரிய கதாநாயகிகளின் பட்டியலில் இடம் பெறமுடியவில்லையே என்கிற கவலையில் வாடிப்போனார்.

அவரது கவலையைத் தீர்க்கும் விதமாகத் தற்போது அபிஷேக் பச்சனுடன் ‘ஆல் இஸ் வெல்’ என்ற படத்தில் நடிக்கும் ஜாக்பாட் அடித்தது. இதைத் தொடர்ந்து தற்போது அக்ஷய்குமாருடன் ‘ஷாகீன்’ என்ற படத்தில் இரண்டாவது பெரிய வாய்ப்பு அமைந்துவிட்டது.

ஷாகீன் படத்தில் முதலில் நடிக்க முடிவானவர் நர்கீஸ் ஃபக்ரி. ஆனால் அவர் கால்ஷீட் டைரியில் இடம் இல்லாத்தால் அசினுக்கு அடித்தது அதிருஷ்டம். ‘ஹவுஸ்ஃபுல்-2’, ‘கில்லாடி 786’ படங்களைத் தொடர்ந்து அக் ஷய்குமாருடன் மூன்றாவது முறையாக ஜோடி சேரும் அசினுக்கு அங்கே சம்பளம் 2.5 கோடி.

SCROLL FOR NEXT