இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: நகர்வலம்

இந்து டாக்கீஸ் குழு

தண்ணீர்

லாரி ஓட்டும் எளிய குடும் பத்து இளைஞன் குமாரும் (யுத்தன் பாலாஜி) வலுவான குடும்பப் பின்னணிக் கொண்ட பள்ளி மாணவி ஜனனியும் காதலிக்கிறார்கள். காதல் வெளியே தெரிந்ததும் பெண் வீட்டாரிட மிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்புகிறது. ஜனனியின் சித்தப்பா அரசியல்வாதி, அவளது அண்ணன் அவரால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட ரவுடி. இருவரும் இணைந்து குமாரைத் தீர்த்துக்கட்ட நினைக்கும்போது, அவர்களின் தாக்கு தலையும் எதிர்ப்பையும் காதலர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதே கதை.

கட்சி அரசியலில் அழுக்காக இருக் கும் சித்தப்பா கதாபாத்திரம், நாயகனின் அண்ணனை வைத்து அரங்கேற்றும் தொடக்கக் கொலை மீது இயக்குநர் நமது மொத்த கவனத்தையும் குவிக் கிறார். அந்தக் கொலைக்கான முஸ்தீபு கள், அதை வைத்தே படம் நகரக்கூடும் என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் கதாபாத்திரங்களின் குணாதி சயத்தை நிறுவுவதற்கான முயற்சி என்பதற்கு மேல் இதற்கும் கதைக்கும் தொடர்பில்லை.

காதலர்கள் இணைய இருந்த நேரத்தில் நிகழும் எதிர்பாராத திருப் பம் கடைசி 20 நிமிடங்களை விறு விறுப்பாக்கிவிடுகிறது. ஆனால் அதற்கு முந்தைய முக்கால்வாசிப் படம்?

எதிர்பாராத திருப்பம் ஒன்றை நம்பி, அதை மட்டுமே ஒரே துருப்புச் சீட்டாக வைத்து நகரும் சம்பவங்களற்ற திரைக்கதையில் காட்சிகள் அனைத்தும் ஊகிக்கும் விதமாகவும் எதிர்பார்க்கும் வரிசையிலும் வந்துகொண்டேயிருப்பது பெரும் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த ஒரே ஒரு திருப்பத்துக்காக தட்டையான திரைக்கதை தரும் 2 மணி நேர அவஸ்தையைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

முதல் பாதியில் கலகலப்பு, இரண் டாம் பாதியில் கதை என்று இயக்கு நர் நினைத்துவிட்டார் போலும். கல கலப்புக்குக் குடிக் காட்சிகள், பாத்திரம் ஒன்றின் பேசும்திறன் குறைபாடு ஆகியவற்றை மட்டுமே நம்பியிருக்கிறார். இது கற்பனை வறட்சி மட்டுமல்ல. பொறுப்பற்ற அணுகுமுறையும்கூட.

நாயகன், நாயகி இருவரையும் இளையராஜா இசையின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாகச் சித்தரிக்கும் இயக்குநர், அதைக் கொண்டு அமைத் திருக்கும் ஜானி படப் பாடல் காட்சி போன்ற ஒரு சிலவற்றைத் தவிர வேறு எந்தக் காதல் காட்சியும் ரசிக்கும்படி இல்லை. கதையை நகர்த்திச் செல்லவும் உதவவில்லை.

குமாராக நடித்திருக்கும் பாலாஜி, ஜனனியாக நடித்திருக்கும் தீக்ஷிதா ஆகிய இருவரும் கதாபாத்திரங்களுக் குப் பொருத்தமாக இருப்பதுடன், ஈடு பாட்டுடன் நடிக்கவும் செய்திருக் கிறார்கள். பாலசரவணன், யோகி பாபு, அண்ணனாக நடித்திருக்கும் முத்துக் குமார், ரவி, ஜி.மாரிமுத்து ஆகி யோரின் நடிப்பு அவர்களைக் கதா பாத்திரங்களாகவே உணரவைத்து விடுகிறது. நமோ நாராயணன் எல்லாப் படங்களிலும் வருவதுபோல் வந்து செல்வது எரிச்சல்.

சென்னையில் நெரிசலான பகுதி களையும் அவை மழை நாளில் எவ்வாறு காட்சியளிக்கின்றன என்பதையும் தமிழ்த் தென்றல் தனது ஒளிப்பதிவில் பதிவுசெய்த விதம் யதார்த்தம். பவன் கார்த்திக்கின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஆறுதல் அளிக்கின்றன.

சென்னைக்குள் ஒளிந்திருக்கும் ஓராயிரம் கதைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டுள்ள இயக்குநர், அதை நேர்த்தியான திரைக்கதையின் மூலம் வெளிப்படுத்தத் தவறிவிட்டார். பல்வேறு கவனச் சிதறல்களும் சமரசங்களும் கொண்ட திரைக்கதை ஏற்படுத்தும் அயர்ச்சி நகர்வலத்தைச் சலிப்பூட்டும் அனுபவமாக்குகிறது. வாழ்வின் பதிவுகள் மட்டுமே குறிப்பிடத்தக்க விதத்தில் இருக்கின்றன.

SCROLL FOR NEXT