இந்து டாக்கீஸ்

இதுதாங்க போலீஸ்

செய்திப்பிரிவு

பவன் கல்யாண் நடித்த 'அத்தன்டிகி தாரெதி' தெலுங்குப் படம் சென்னை கேசினோ தியேட்டரில் கடந்த 27ம் தேதி ரிலீசானது. அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் என்று ஞாயிறன்றும் பலகை வைக்கப்பட்டது. ஆனாலும், ஏராளமான ரசிகர்கள் வெளியே நின்றிருந்தனர். அப்போது, போலீஸ் ஜீப் வந்தது. “போக்குவரத்து பாதிக்குது. எல்லாரும் உள்ள போங்க” என்று விரட்டிய போலீசார், கதவையும் திறந்துவிட்டனர். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்று, மொத்தக் கூட்டமும் முண்டியடித்து உள்ளே ஓடியது. போலீஸ்காரர் ஒருவர், “கவுன்டர் முன்னால வரிசையா நில்லு” என்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தி ‘பர்ஃபாமன்ஸ்’ காட்ட.. மெல்ல வெளியே வந்தார் தியேட்டர் மேனேஜர். “இடமே இல்லன்னுதானே ஹவுஸ்ஃபுல் போர்டு வச்சிருக்கோம். வெளிய நின்ன கூட்டத்தை ஏன் சார் கவுன்டர் முன்னால நிக்க வச்சிருக்கீங்க?” என்றார். போலீஸ்காரர் டென்சனாகி, ரசிக மகாஜனங்கள் மீது பாய்ந்தார். “ஹவுஸ்ஃபுல்னு போட்டிருக்கில்ல. இங்கிலீசு படிக்கத் தெரியாதா. நாங்கதான் சொல்றோம்னா உங்களுக்கு எங்க போச்சு” என்றபடியே லத்தியை சுழற்றி, கூட்டத்தை மீண்டும் விரட்டினார்.

SCROLL FOR NEXT