இந்து டாக்கீஸ்

திரை நூலகம்: கதையல்ல... நிஜம்

மு.முருகேஷ்

“18 வயதில், என் அம்மா எனக்குத் திருமணம் செய்து வைத்திருந்தால் சந்தோஷமாக நான் குடும்ப வாழ்க்கையில் குடிகொண்டிருப்பேன். வீட்டைப் பார்த்துக்கொண்டு, குழந்தை குட்டிகளை வளர்த்துக்கொண்டு திருப்தியுடனே இருந்திருப்பேன்…”

எவ்வித ஒளிவட்டமுமின்றி இப்படி வெளிப்படையாய் சொன்னவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நட்சத்திர நடிகையும் தமிழகத்தை நான்கு முறை ஆட்சி செய்தவருமான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா.

ஆணாதிக்க ஒடுக்கு முறைகள் மிகுந்திருக்கும் திரைப்படத் துறையில் தனித் திறன் மிக்க கலைஞராய் ஜெயலலிதா சந்தித்த இன்னல் கள் ஏராளம். எந்தத் தடையைக் கண்டும் தயங்கி நிற்காமல், அவற்றை எதிர்கொண்டு முன்னேறியதால்தான் கலையுலகின் உச்சியை அவரால் தொட முடிந்தது.

பன்முகத் திறன் கொண்ட ஜெயலலிதா எனும் ஆளுமையின் வாழ்க்கையை, எளிய மொழியில் ஒரு கதைபோல எழுதியிருக்கிறார் இயக்குநர் பாலு மணிவண்ணன். ஜெயலலிதா தன் வாழ்வில் சந்தித்த பல தடைகளைத் தன் துணிச்சலால் தாண்டி வந்த விதம், ஜெயிக்க நினைக்கும் அனைவருக்கும் தேவைப்படும் பாடம் என்ற கோணத்தை முன்வைக்கிறது இந்த நூல்.

ஜெயலலிதா – நடிப்பும் அரசியலும்
இயக்குநர் பாலுமணிவண்ணன்,
பக்கம்:186 விலை:ரூ.150,
யுனிக்யூ மீடியா இன்டகிரேடர்ஸ்,
திருமுல்லைவாயில்,
சென்னை–600109
தொடர்புக்கு:9043050666

SCROLL FOR NEXT