இந்து டாக்கீஸ்

மீண்டும் தள்ளிப்போகிறது ‘கோச்சடையான்’ ரிலீஸ்

செய்திப்பிரிவு

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ‘கோச்சடையான்’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது. பொங்கல் பண்டிகைக்கு பதிலாக ஜனவரி 26ம் தேதி இப்படம் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்தது.

திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகளை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, சீனாவில் தங்கி கவனித்து வருகிறார். குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தின் வேலைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படுவதால் டிசம்பர் 12 வெளியாகவிருந்த ஆடியோ வெளியீட்டு விழாவை தள்ளிவைத்து டிசம்பர் 25ம்தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘கோச்சடையான்’ திரைப்படம் ஜனவரி 26 ம் தேதி வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT