சந்தைக்கு காய்கறி ஏற்றிச் செல்லும் இரண்டு டெம்போ வேன் ஓட்டு நர்களிடையே நடக்கும் மோத லும், அதில் மலரும் ஒரு காதலும்தான் தங்கரதம்.
சித்தப்பாவை (‘ஆடுகளம்’ நரேன்) நம்பி வாழ்க்கையை ஓட்டும் நாயகன் வெற்றி. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்குச் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து காய்கறி களை ஏற்றிவரும் டெம்போ ஓட்டுநர் வேலை. அதேபோல காய்கறிகளை ஏற்றி வரும் சவுந்தரராஜாவுக்கும் வெற் றிக்கும் தொழில் போட்டி. இருவருக்குமிடையேயான மோதலுக்கு மத்தியில் சவுந்தரராஜாவின் தங்கை அதிதி கிருஷ்ணாவை காத லிக்கிறார் வெற்றி. ஒரு கட்டத்தில் தொழில் போட்டி பெரிதாகி வெற்றியைக் கொல்ல திட்டம் போடுகிறார் சவுந்தரராஜா.
இந்நிலையில் ‘ஆடுகளம்’ நரேன், சவுந்தரராஜாவின் தங்கையைத் தன் மக னுக்கு திருமணம் பேசி முடிக்கிறார். சித்தப்பாவின் பாசத்துக்கும் அதிதியுடனான காதலுக்குமிடையே ஊசலா டும் நாயகன் என்ன முடிவு எடுக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
தங்கரதம், பரமன் என்ற 2 டெம்போ வேன்களில் எது முதலில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சந்தைக்கு வந்து சேர்கிறது என்கிற பரபரப்போடு தொடங்குகிறது படம். காய்கறி சந்தை வியா பாரம், அங்கே நடக்கும் தொழில் நுணுக்கம், டெம்போ வேன் ஓட்டுநர் களின் வாழ்க்கை ஆகிய வற்றை எதார்த்தமாக கையாண்டிருக்கிறார் இயக் குநர் பாலமுருகன். வழக்க மாக காதலைத் தடுக் கும் ஜாதி, மதம், அந்தஸ்து போன்ற காட்சிகளைத் தவிர்த்து ஒரு தொழில் போட்டி ஏற்படுத்தும் விபரீதங் களையும் அனுதாபங்களை யும் திரைக்கதையாக்கி யதற்கு இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால், இது காதல் படமா, பாசப் போராட்ட படமா எனக் காட்டுவதில் இயக்குநருக்கு ஏற்பட்ட குழப்பம் படத்தின் கிளைமாக்ஸை தடுமாற வைக்கிறது.
காதல், கோபம், காமெடி ஆகியவற்றை வெளிப்படுத்து வதில் வெற்றியின் நடிப்பு ஒரேமாதிரி இருக்கிறது. ‘ஆடுகளம்’ நரேன், சவுந்தர ராஜா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர்தான் காட்சிகளைத் தேற்றுகிறார் கள். நாயகி அதிதி கிருஷ்ணா இயல்பு.
காதலர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் படம் பார்க்கப் போடும் திட்டம், கோயிலில் சந்திப்பது, போனில் பேசுவது, காதலிக்கு செம்பருத்திப் பூ கொடுப் பது உள்ளிட்ட காதல் காட்சிகளில் புதுமை எதுவும் இல்லை.
‘நான் கடவுள்’ ராஜேந் திரன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் சந்திக்கும் டீக் கடை காமெடி ஆரம்பத்தில் சிரிக்க வைத்தாலும் தொடர்ந்து இரட்டை அர்த்த வசனங்களால் நீளும் காட்சி கள் முகச் சுளிப்பை ஏற்படுத்துகின்றன.
பழநி, ஒட்டன்சத்திரம், கிரா மத்து வீடுகள் உள்ளிட்ட வற்றை ஒளிப்பதிவாளர் ஆர்.ஜேக்கப் அழகாக பதிவு செய்திருக்கிறார். டோனி பிரிட்டோவின் பின்னணி இசை, சுரேஷ் அர்ஸின் எடிட்டிங் ஆகியவை படத் துக்கு பலம் சேர்க்கின்றன.
தொழிலில் போட்டியாக இருக்கும் வெற்றியை தீர்த்துக் கட்ட நினைக்கும் சவுந்தர ராஜா, தன் தங்கையின் காதல் விவகாரம் தெரிந்த பிறகும் கோபப்படாமல் அமைதியாக இருப்பது ஏன்? இப்படி சில லொடலொடப்புகளை திரைக்கதையில் சரி செய்திருந்தால் தங்கரதம் பதவிசாக நகர்ந்திருக்கும்.