- ஓவியம்: எஸ்.சந்திரன்
காமிக்ஸ் ஓவியர் எஸ்.சந்திரன் சிவகார்த்திகேயன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. அந்தப் படத்தின் திரைக்கதையை காமிக்ஸ் வடிவில் வரைந்து கவனம் ஈர்த்திருக்கிறார் ஓவியர் எஸ்.சந்திரன். சென்னையில் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை ஓவியம் பயின்றவர். திரைப்படங்களுக்கு ‘ஸ்டோரி போர்டு’ வரைவதைத் தனது முதன்மைத் துறையாகத் தேர்ந்துகொண்டு பணியாற்றிவரும் இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். |