சென்னையின் முக்கிய பகுதி யான வேளச்சேரியில் இருக் கிறது அந்த மேம்பாலம். அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் அதை கடந்துசெல்கின்றனர். அவர் களில் சிலர், சாலை விதிகளை மதிக் காமல் ‘யூ-டேர்ன்’ அடிக்கிறார்கள். இவ்வாறு விதி மீறுபவர்களை சந்தித்து சிறப்புக் கட்டுரை எழுத விரும்புகிறார் செய்தியாளர் சமந்தா. அப்படி விதிமீறிய ஒருவரை பேட்டி எடுக்கச் செல்லும்போது, எதிர் பாராதவிதமாக அவர் இறந்து கிடக் கிறார். போலீஸின் சந்தேகக் கண், சமந்தா மீது விழுகிறது. அவரை அழைத்துவந்து விசாரிக்கத் தொடங்குகின்றனர். ஆனால், இறந் தவர் தற்கொலை செய்துகொண்ட தாக உடற்கூறு ஆய்வு தெரிவிக் கிறது. ஆனால், உண்மை அது அல்ல. அந்த மேம்பாலத்தில் அத்து மீறியவர்கள் அடுத்தடுத்து பலியா கும் அதிர்ச்சிகரமான தொடர்ச்சி தெரியவருகிறது. அதன் மர்மப் பின்னணியை நோக்கி விறுவிறுப் பாகப் பயணிக்கிறது திரைக்கதை.
‘லூசியா’, ‘யூ-டேர்ன்’ ஆகிய கன்னடப் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் பவன்குமார். கதையிலோ, காட்சி அமைப்பிலோ பெரிய மாற்றங்கள் எதையும் செய் யாமல் 'யூ-டேர்ன்' படத்தை கச்சித மாக தமிழில் மறுஆக்கம் செய்திருக் கும் அவரை வரவேற்கலாம்.
அக்காவின் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்பையும், அவர் பரிந்துரைக்கும் காதணிகளையும் அணிந்துகொண்டு ரொமான்ஸ் மன துடன் அலுவலகம் வருகிறார் சமந்தா. அதுமுதல், நடக்கும் ஒவ் வொரு நிகழ்வும் தங்களுக்கே நடப்பதுபோல பார்வையாளர் களை உணரவைத்துவிடுகிறது இயக்குநரின் பிடிமானம் விலகாத கதை சொல்லல். அதேபோல, கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர் களைத் தேர்வு செய்த விதத் திலும் ‘அட!’ போட வைத்து விடுகிறார்.
மேம்பால வழக்கு ஃபைலை மூடிவிட்டு மற்ற வழக்குகளைப் பார்க்கும்படி மூத்த அதிகாரி கண்டிப்புடன் கூறினாலும், தன் தனிப்பட்ட ஆர்வத்தில் அந்த வழக்கை கையில் எடுத்து துறுவ ஆரம்பிக்கிறார் ஆதி. அவரும், சமந்தாவும் மொத்தப் படத்தையும் தூண்போல தாங்குகின்றனர். மிகை யற்ற எல்லைக்குள்ளும், கதாபாத் திரத்தை உணர்ந்தும் கடைசிவரை வெளிப்படுகிறது அவர்கள் இரு வரது நடிப்பு. குறிப்பாக, விசா ரணை அறைக்குள் சமந்தா காட்டும் பய உணர்ச்சிகள், பின்னர் தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் உடல் நடுங்கும் நிலையில் சுருண்டுகிடப்பது என காட்சிக்குக் காட்சி, பய உணர்ச்சியை நமக்குக் கூட்டிவிடுகிறார்.
சமந்தா, ஆதிக்கு அடுத்த இடத் தில் ‘ஆடுகளம்’ நரேன், ‘கத்துக் குட்டி’ நரேன், பூமிகா ஆகியோரும் பளிச்சென்று கவனம் ஈர்க்கின்றனர்.
சமந்தா - ராகுல் இடையிலான மெல்லிய காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் பிரதான கதைக்கு பெரிதாக உதவவில்லை.
பின்னணி இசையில் அதிகமும் மிரட்டாத பூர்ணசந்திர தேஜஸ்வி, ஒரு திரில்லர் மற்றும் திகில் கதைக்கு ஏற்ற மனநிலையை உருவாக்கும் ஒளிப்பதிவை அளித்த நிகேத் பொம்மி, சிக்கல்கள் இல்லாத கதையை கச்சிதமாகத் தொகுத் திருக்கும் சுரேஷ் ஆறுமுகம் ஆகிய மூவரது தொழிநுட்பப் பங்களிப்பும் படத்துக்கு முதுகெலும்பு.
ஆவி, அமானுஷ்யம் ஆகிய வற்றை சித்தரித்த விதத்திலும், முழு அழுத்தம் தரும் விதமாக ஓர் அமானுஷ்யக் கதையில் சமூக விழிப்புணர்வைக் கடத்திய விதத்திலும் ‘யூ-டேர்ன்’ தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்கும்.