இந்து டாக்கீஸ்

ட்விட்டர் வலை: கௌதம் மேனனின் முதல் தேர்வு

ஸ்கிரீனன்

கடந்த வாரத்தின் டிவிட்டர் இணையத்தில் ஹாட் டாக்காக இருந்தவை ‘கத்தி', ‘ஐ' ஆகிய படங்களின் இசை வெளியீடுகள். அனிருத் இசையில் விஜய் பாடியிருக்கும் ‘லெட்ஸ் டேக் ய செல்பி புள்ள’ என்ற பாடல் இணையத்தில் ரகசியமாகக் கசிந்தது. இதனைப் பலரும் பாராட்டிக் கருத்து தெரிவித்தார்கள். பாடலை வேண்டுமென்றே வெளியிட்டார்களா என்ற டிவிட்டர் வாசிகளின் கேள்விக்கும் இயக்குநர் தரப்பில் பதில் இல்லை.

அதேநேரம் சிம்பு, தனுஷ் உட்பட இசையமைப்பாளர் அனிருத்துக்கு நெருக்கமான பலரும் ‘கத்தி' படத்தின் இசைக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். “கத்தி பாடல்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது. அனிருத் பிரமாதமாகச் செய்திருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும். படக் குழுவிற்கு எனது வாழ்த்துகள்” என்று சிம்பு டிவீட்டி இருக்கிறார்.

‘ஐ' படத்தின் டீஸர் டிரைலருக்கு கோலிவுட், டோலிவுட்டிலிருந்து வாழ்த்துகள் குவிகின்றன. முன்னணி தெலுங்குப்பட இயக்குநரான ராஜமவுலி, “ஷங்கர் சார்... ஐ டீஸர் அற்புதமாக இருக்கிறது. பிரம்மாண்டத்திலும், காட்சி அமைப்பிலும் உங்களை நெருங்க யாருமே இல்லை” என்று டிவீட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

“நான் எழுதும் எல்லாக் கதைகளிலும், த்ரிஷாதான் கதாநயாகிக்கான முதல் தேர்வாக இருக்கிறார்” என்று கெளதம் மேனன் அளித்த பேட்டியால் த்ரிஷா சந்தோஷத்தில் மிதந்தார். இது தொடர்பான தனது மகிழ்ச்சியை ட்விட்டர் தளத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் த்ரிஷா.

SCROLL FOR NEXT