இந்து டாக்கீஸ்

கடந்த காலத்தை மாற்றியமைக்கும் ஜாலம்

ஆர்.சி.ஜெயந்தன்

மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ கதைகளில் தமது டி.என்.ஏ.களின் தனித்தன்மையால் அபூர்வ சக்திகள் கொண்ட மனிதர்களான மியூடன்ஸ்களில் (Mutants) சாதாரண மனிதர்களை எதிர்க்காத எக்ஸ் மேன் குழுவினர் மற்றும் அவர்களுக்கு எதிரான தீய எண்ணம் கொண்ட மியூடன்ஸ் (Mutants) ஆகியோருக்கு இடையே நடக்கும் யுத்தம் பற்றி ஏற்கனவே 3 பாகங்கள் வெளிவந்துவிட்டன. அதன் பின் எக்ஸ் மேன் குழுவினர் எவ்வாறு உருவாக்கப்பட்டவர்கள் என ஒரு பாகமும் அவர்களில் வயதாகுதல், மற்றும் காயப்படுதல் ஆகிய தன்மைகள் அற்றவனும் மிக வீரமான போராளியுமான வூல்வரின் (Wolverine) பற்றி இரு பாகங்களும் வெளிவந்து எக்ஸ்மேன் சீரிஸ் ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்தன. இந்நிலையில் தற்போது வெளிவரவுள்ள இப்பாகம் இந்த மியூடன்ஸ் மனிதர்கள் எவ்வாறு இணைந்து தமது கடந்த காலத்தை மாற்றியமைத்து எதிர்காலத்தில் தம்மைத் தற்காத்துக் கொள்கின்றனர் எனும் திரைக்கதையுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது.

இந்த வருடத்தின் கோடை கால வெளியிடுகளில் ரியோ 2, தி அமேசிங் ஸ்பைடர் மேன் -2 போலவே பிரம்மாண்டமாகத் தயாராகியிருக்கும் எக்ஸ்மேன் - ‘கடந்த காலத்தின் எதிர் காலம்' என்ற இந்த பாகம் மே மாதம் 23-ம் தேதி இந்தியாவில் ஆங்கிலம் தவிர , ஹிந்தி , தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டிரெய்லர் மில்லியன்களில் ஹிட்டடித்தது. உலகத் தரம் வாய்ந்த நடிகர்களான ஹ்யூக்ஸ் ஜாக்மன், ஜேம்ஸ் மகவே ஆகியோர் நடிப்பில் பரயன் சிங்கர் இயக்கதில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் உலகெங்கும் வெளியிடுகிறது.

SCROLL FOR NEXT