திரைப்படங்களை மதிப்பாய்வு செய்பவர்கள் அடிப்படையில் தேர்ந்த சினிமா ரசிகராகவும் இருக்க வேண்டியது அவசியம். இதை உறுதிசெய்யும் விதமாக 720 பக்கங்கள் கொண்ட இந்நூலின் ஆசிரியரான அப்சல், ரசனை சொட்டும் ஆய்வை வழங்கியிருக்கிறார்.
இன்றைய ஓடிடி, தொலைக்காட்சி, சமூகக் காணொளி உலகில், கடந்த காலத்தில் வெளியான கிளாசிக் இந்தித் திரைப்படங்களைப் பார்ப்பது எளிது. ஆனால், திரையரங்குகளில் மட்டுமே காணமுடியும் என்றிருந்த காலத்தில், தமிழ்நாட்டில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படங்கள் ஏராளம். அவற்றிலிருந்து கடந்த 50 ஆண்டுகளில் வெளியான 50 படங்களைத் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறார்.
ஒவ்வொரு படத்தின் கதை, அது உருவான விதம், படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள், இதில் எழுதப்பட்டுள்ள படங்களின் இயக்குநர்களுடைய ஒட்டுமொத்தத் திரைப்பயணம் பற்றிய பார்வை என விரித்தும் எழுதியிருக்கிறார். இந்தி வெகுஜன சினிமா குறித்து சுவாரசியமாக வாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், இதுவரை பார்த்திராத மிக முக்கியமான இந்திப் படங்களின் கதையமைப்பை அறிந்துகொள்ள விரும்பும் திரையுலகினருக்கும் திகட்டாத வாசிப்பு இந்நூல். 50 படங்களைப் பற்றிய கட்டுரைகளையும் வாசித்து, திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் எழுதியிருக்கும் முன்னுரையும் நச்!
காணத் தவறாதீர்கள்
- 50 சிறந்த
ஹிந்திப் படங்கள்
ஆசிரியர் அப்சல்
விலை: ரூபாய் 800/-
புஸ்தகா வெளியீடு
பெங்களூரு - 560 076
தொடர்புக்கு: 7418555884