இந்து டாக்கீஸ்

3BHK: அப்போது இல்லையென்றால் இப்போது!

Guest Author

‘ஒரு சொந்த வீடுங்கிறது ஆசை இல்லை, அது ஒரு மரியாதை’ என்கிற வசனம்தான் இந்த 3BHK மொத்தப் படமும். அனுபவம் மிக்க நடிகர்கள் இருப்பதால் நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், படம் பார்க்கும் நமக்கே ‘ஒன்று வீடு வாங்கு இல்லன்னா, விட்டுத் தொலை’ என்கிற அந்தக் குடும்பத்தின் சோகம் நம்மைச் சுத்திச் சுத்தி அடிக்கிறது! சித்தார்த் அவர் வாழ்க்கையைத் தேடிக்கொள்வது ஆறுதல். போகிற போக்கில், அப்பா அம்மா பேச்சைக் கேட்டால் உருப்பட்ட மாதிரிதான் என்று கதையை நகர்த்திக் கொண்டுபோவதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.

கதையின் தொடக்கத்தில் வரும் 2006ஆம் ஆண்டில் சரத் குடும்பத்திடம் ஏழரை லட்ச ரூபாய் பணம் இருப்பதாகக் காட்டுகிறார்கள். அந்தப் பணத்தை வைத்து நிச்சயமாக அந்தக் காலக்கட்டத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கியிருக்க முடியும். ஆனால், அதன் பிறகு தொடர்ச்சியாக அவர்கள் எடுக்கும் முட்டாள்தனமான முடிவால் ஒரு செங்கல்லைக்கூட வாங்க மாட்டார்கள் என்று நமக்கு நம்பிக்கை உடைந்துவிடுகிறது.

அதிலும் பெண்ணுக்குக் கல்யாண முடிவு எடுத்த விதம் நம்மைக் காண்டாக்குகிறது. எதையெல்லாம் செய்தால் வீடு வாங்க முடியாது என்று இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அதையும் இன்றைய நடுத்தர வர்க்கம் தெரிந்துகொள்வது நல்லதுதானே... அப்போது திரையரங்கில் தவற விட்டிருந்தால் இப்போது அமேசான் வீடியோவில் பாருங்கள் - சந்தோஷ் விஜயராஜ்

SCROLL FOR NEXT