இந்து டாக்கீஸ்

“கதையை நம்பினால்தான் வாழ்க்கை” - ‘ரெட்ட தல’ இயக்குநர் கிருஷ். திருக்குமரன் நேர்காணல்

திரை பாரதி

சிவகார்த்திகேயனை மாஸ் கதாநாயகனாக்கிய படங்களில் ஒன்று ‘மான் கராத்தே’. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருஷ். திருக்குமரன்.

தற்போது அருண் விஜய் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ரெட்ட தல’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். விரைவில் வெளியிடவிருக்கும் டீசரை திரையிட்டுக் காட்டிய அவருடன் படம் குறித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

படத்தின் டீசரில் அருண் விஜயின் ஒரு கதாபாத்திரம் ஒரு ஸ்பானியத் தாதாவைப் போல் இருக்கிறது. என்ன கதை, எங்கே நடக்கிறது? - கதையின் கருவை ஒருவரியில் சொல்வதென்றால் ‘Ruthless ambition leads to its destruction’. முறையற்ற, கருணையற்ற ஒருவனின் கனவு அவனை அழிவின் எந்த எல்லைக்கு அழைத்துக்கொண்டுபோய் நிறுத்தும் என்பதுதான் கதை. உபேந்திரா, காளி என இரட்டை வேடங்களை அருண் விஜய் ஏற்றிருக்கிறார். உபேந்திரா கதாபாத்திரம் தான் இந்த ‘ஸ்பானிஷ் லுக்’குடன் வருவது.

அவன் கோவாவைச் சேர்ந்தவன். காளி, புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மீனவன். காதலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்பவன் காளி. இதில் நல்லவன், கெட்டவன், அவனைச் சுற்றியிருக்கும் எல்லாக் கதாபாத்திரங்களின் ‘கிரே ஷேட்’களும் வாழ்க்கையின் போக்கில் ஒரு கட்டத்தில் வெளிப்படும் விதமாக எழுதப்பட்ட திரைக்கதை இது. புதுச்சேரி, கோவாவில் கதை நடக்கிறது.

புதுச்சேரி, கோவா எனும்போது, அந்தப் பகுதிகளுக்கென்று இருக்கும் கலாச்சாரப் பின்புலத்துக்குக் கதையில் இடமிருக்கிறதா? - இல்லை. இதை முழுக்க முழுக்கத் திரையரங்க மாஸ் தருணங்களுக்கான ஒரு படமாக மட்டுமே எழுதி, இயக்கியிருக்கிறேன். என்றாலும் இதில் மனித உறவுகளுக்கு இடையிலான சில உறவுச் சிக்கல்களைக் கதையின் போக்கைத் தீர்மானிக்கும் அம்சமாகப் பயன்படுத்தியிருக்கிறேன்.

இது தட்டை யான கேங்ஸ்டர் படமாக இருக்காது. திரைக்கதை எழுத்து, அதைப் படமாக்கப் போடப்பட்ட படக்குழுவின் உழைப்பு, பாடல்கள், பின்னணி இசையில் இசை யமைப்பாளர் சாம்.சி.எஸ் கொண்டுவந்திருக்கும் புதுமை என எல்லாம் சேர்ந்து, ‘மான் கராத்தே’ படத்தின் இயக்குநருக்குக் கிடைத்த நல்ல பெயரை இந்தப் படத்திலும் தக்க வைத்திருக்கிறார் என ரசிகர்களைச் சொல்ல வைக்கும் என உறுதியாக நம்புகிறேன். இதற்காக உயிரைக்கொடுத்து ஒரு டீமாக நாங்கள் உழைத்தி ருக்கும் படம்.

படம் தீபாவளி வெளியீடு என்று பேச்சு எழுந்திருக் கிறது. அதேபோல், அருண் விஜயும் மாஸ் ரசிகர்களுக்கான ஒரு கொண்டாட்டத்தைத்தர விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.. படம் தீபாவளி வெளி)யீடா என்பதைத் தயாரிப் பாளர் முடிவு செய்வார். மென்பொருள் துறையில் இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் வந்திருக்கும் பாபி பாலச்சந்திரன் சார், ‘டிமாண்டி காலனி 2’ படத்தைத் தொடர்ந்து இந்தப் பெரிய படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தை முழுவதுமாக முடித்துக் காட்டியபோது இசையமைப்பாளர் சாம். சி.எஸ்., ‘இந்த இடத்தில் கோவாமாதிரியான விண்டேஜ் நிலப்பரப்பில் படமாக்கப்பட்ட ஒரு டூயட் டான்ஸ் நம்பர் இடம்பெற்றால் ரகளையாக இருக்கும்’ என்று இசையமைத்துக் கொடுத்தார். அதைத் தயாரிப்பாளரிடம் சொன்னதும் ‘நல்ல முடிவு, எவ்வளவு செல வானாலும் உடனே பாடலைப் படம்பிடியுங்கள்’ என்றார்.

நாங்கள் மலாக்காவில் அருண் விஜயும் சித்தி இத்னானியும் ஆடிப் பாடும் பாடலை அந்த டூயட்டைப் படமாக்கினோம். அந்தப் பாடலை அருண் விஜய்க்காக, தனுஷ் பாடிக்கொடுத்தார்.

அருண் விஜய் இரட்டை வேடக் கதைக்கு எவ்வளவு உழைப்பைப் போட்டார்? - ஒரு திரைக்கதையை கதாநாயகன் நம்பும் போதுதான் அதுவொரு ‘புராஜெக்ட்’ ஆக மாறு கிறது. எங்களைப் போன்றவர்களுக்கு அது வாழ்க்கையாக மாறுகிறது. அருண் விஜய் நம்பினார்.

அவர் ஏற்கெனவே ‘தடம்’ படத்தில் உளவியல் சிக்கல் கொண்ட இரட்டை வேடங்களை ஏற்று, தன்னுடைய திறமையைக் காட்டியிருந்தார். இதில் ஒரு மீனவனாகவும் ஒரு கேங்ஸ்டர் ஆகவும் காட்டியி ருக்கும் வேறுபாடும் அர்ப் பணிப்பும் ரசிகர்களை வியக்க வைக்கும்.

SCROLL FOR NEXT