இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: நட்புக் கரடி

எஸ்.எஸ்.லெனின்

சர்வதேச நட்பு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு அன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் பொருட்டு உலகின் நட்பு தூதராக ஐ.நா-வால் அறிவிக்கப்பட்ட சிறப்புக்குரியது ‘வின்னி த பூ’ (Winnie-the-Pooh) என்ற பொம்மைக் கரடி. இந்த நட்புக் கரடியை கதாபாத்திரமாகக் கொண்ட ‘கிறிஸ்டோபர் ராபின்’ திரைப்படம் இவ்வருட நட்பு தினத்தினை முன்னிட்டு ஆகஸ்ட் 3 அன்று வெளியாகிறது.

ஆங்கிலேயக் கதாசிரியரான ஏ.ஏ.மில்ன்(A.A.Milne) தனது மகன் கிறிஸ்டோபர் ராபின் விளையாடும் பொம்மைக் கரடிக்கு ‘வின்னி த பூ’ எனப் பெயரிட்டு படைத்த குழந்தைகளுக்கான கதைகள் பல தலைமுறைகளாகக் குழந்தைகள் உலகில் உலா வருபவை. மில்ன் கற்பனையில் உருவான நூறு ஏக்கர் தோட்டத்தில் சிறுவன் கிறிஸ்டோபரின் சகாக்களான கரடி, குட்டிப்புலி, கழுதை, பன்றி, கங்காரு உள்ளிட்ட பொம்மைகளின் சாகசங்களை மையமாக வைத்துப் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

அந்த வரிசையில் ‘கிறிஸ்டோபர் ராபின்’ திரைப்படம் இவ்வருட நட்பு தினத்தை சிறப்பிக்க வருகிறது. இந்தத் திரைப்படத்தில் சிறுவன் கிறிஸ்டோபர் பெரியவனாகி ஒரு சிறுமிக்கு தந்தையாகவும் வளர்ந்திருக்கிறான். ஆனபோதும் அவ்வப்போது தனது குழந்தைப் பருவத்து பொம்மை நண்பர்களை நினைத்து ஏங்குகிறான். ஒரு கட்டத்தில் புற உலகின் கசப்புகளால் களைப்படையும் கிறிஸ்டோபர், தனது பழைய நண்பர்களை தேடிச் செல்கிறான். இந்த வளர்ந்த குழந்தையை, பொம்மை கதாபாத்திரங்கள் சந்திப்பதும், அவர்களுக்கு இடையிலான நெகிழ்ச்சியும், வழக்கமான சாகச தெறிப்புகளுமாக புதிய திரைப்படத்தின் கதை செல்கிறது.

குழந்தைகளையும், உள்ளுக்குள் குழந்தைமையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பெரியவர்களையும் ரசிக்க வைக்கும் குறிக்கோளுடன் உருவான ‘லைவ்-ஆக்‌ஷனும் அனிமேஷனும்’ கலந்து கட்டிய இந்த ஃபேண்டஸி நகைச்சுவை திரைப்படத்தில்வளர்ந்த கிறிஸ்டோபராக இவான் மெக் கிரிகர் நடிப்பும், பொம்மைக் கரடிக்கு ஜிம்மி கம்மிங்ஸ் பின்னணி குரலுமாக ‘கிறிஸ்டோபர் ராபின்’ திரைப்படத்தை இயக்கி இருப்பவர் மார்க் பாஸ்டர்.

பாலாஜிக்கு மறுபடியும் வெளிய ஒரு பிக்பாஸ் வெயிட்டிங் - நித்யா @ தேஜு

SCROLL FOR NEXT