எழுபதுகள் வரையிலான தமிழ் சினிமா வரலாற்றை சு.தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட பல ஆளுமைகள் சமூகவியல் நோக்கில் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தி நூல்களை எழுதிச் சென்றுள்ளனர். அஜயன் பாலாவின் இந்த நூல், முந்தைய ஆய்வுகளின் துணை கொண்டு எழுதப்பட்டுள்ளது.
இந்நூலுக்குப் பன்முகக் கலைஞர் சிவக்குமார் எழுதியிருக்கும் முன்னுரையில்:“ஒரு பக்கம் வாய்ப்பு தேடி ஸ்டுடியோக்களில் எம்.ஜி.ஆர். அலைந்து கொண்டிருந்த நேரத் தில்தான் பேரறிஞர் அண்ணாவைத் தொடர்ந்து கலைஞரும் நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தார். அவர், சமூக சீர்திருத்தக் கருத்துகளை தன் வசனத்தின் மூலம் சொல்லி சினிமாவை மாற்றினர்.
‘மந்திரி குமாரி’ படத்தில் எம்.ஜி.ஆருக்குக் கன்னத்தில் விழும் குழியை அனைவரும் குறை சொல்லிக்கொண்டிருக்க, உடனே கலைஞர்தான் அதை மறைக்கும் வகையில் ஒரு தாடி ஒட்டினால் போதும் என்று யோசனை கூறி எம்.ஜி.ஆருக்குத் துணை நின்றார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். படமென்றால் கலைஞர்தான் வசனம் எழுதுவார், கலைஞர் வசனம் எழுதும் படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பை எம்.ஜி.ஆர். தான் உருவாக்கினார். பின்னாளில் இவர்கள் இரண்டு பேரும்தான் அரசியலில் சரித்திரம் படைத்தார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா வரலாறு
பாகம் 2 (1947 - 59)
திராவிட எழுச்சி
வசன யுகம்
அஜயன் பாலா
பக்கங்கள் 524
விலை ரூ. 600/-
வெளியீடு: நாதன் பதிப்பகம்
சென்னை -93
தொடர்புக்கு: 98840 60274