இந்து டாக்கீஸ்

பாடலும் வாழ்க்கையும் | திரை நூலகம்

ரசிகா

ஒரு நாளின் 24 மணி நேரத்தில் இளையராஜாவின் பாட்டுகள் ஒலிக்காத ஒரு விநாடிகூட இருக்க வாய்ப்பில்லை. இரவு, பகல் என எந்தப் பொழுதாக இருந் தாலும் மகிழ்ச்சி, சோகம் என எப்படிப்பட்ட உணர்வு என்றாலும் அவருடைய பாடல்க ளோடு வாழும் தமிழர்கள் உலகெங்கிலும் நிறைந்திருக்கிறார்கள்.

பாடல்கள் மூலமாகக் கதை சொல்வதும் கதை கேட்பதும் தமிழர்களின் கலை மரபு. அந்த மரபை இன்றைக்கும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் இளையராஜாவின் பாடல்களே அனைவரது சொந்த வாழ்விலும் கதைகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. அப்படியான. ராஜாவின் பாடல்களோடு பின்னிப் பிணைந்த வாழ்வின் மிகச் சில கதைகளை இயல்பான உணர்வு பொங்கும் மொழியில் நூலாசிரியர் எழுதியிருக்கிறார்.

ராஜாவின் பாடல்கள் அன்றாட வாழ்வில் எவ்வாறு ஊடாடுகிறது என்பதற்கு இது ஒரு சோற்றுப்பதம். இச்சிறு நூலை வாசித்து முடிக்கும்போது, உங்கள் வாழ்வின் நிகழ்வுகளோடு பிணைந்திருக்கும் ராஜாவின் ராகங்கள் உங்கள் நினைவில் வந்து இசைக்கும். இந்நூலை எழுதியிருக்கும் முருகன் மந்திரம் வளர்ந்து வரும் திரைப் பாடலாசிரியராக இருப்பதால், எளிய, இயல்பான மொழியில் நம் காதோரம் வந்து தாலாட்டும் மெலடியான பாடலைப் போல் மென்மையாக எழுதியிருக்கிறார்.

ஒரே ஒரு ராஜா ஒரு கோடி கதைகள்
முருகன் மந்திரம்
சுவடு பதிப்பகம்
சென்னை - 600073
தொடர்புக்கு: 95510 65500

SCROLL FOR NEXT