இந்து டாக்கீஸ்

‘லப்பர் பந்து’ தினேஷின் இரட்டைப் பாய்ச்சல்! | இயக்குநரின் குரல்

ரசிகா

அறிமுகப்படத்தின் பெயரால் ‘அட்டக்கத்தி’ தினேஷ் என அழைக்கப்பட்டவர், தற்போது ‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றியால், ‘கெத்து’ தினேஷ் என கதாபாத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ‘கருப்பு பல்சர்’ என்கிற படத்தில் முதல் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்திருக்கிறார். அந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கும் முரளி கிருஷ்.எஸ், இயக்குநர் எம்.ராஜே ஷிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

என்ன கதை? இரண்டு தினேஷ்களும் அப்பா - மகனா? - கதை மதுரையில் தொடங்கி சென்னையில் முடிகிறது. மதுரையில் வசிக்கும் கருப்பு என்கிற தினேஷ், ஜல்லிக்கட்டில் பிரபலமான மாடுபிடி வீரர். இன்னொரு தினேஷ் சென்னை யில் வசிக்கிறார். புதிதாகத் திருமணமாக விருக்கும் தனது நண்பனுக்காக ஜல்லிக்கட்டு ஒன்றில் காளையை அடக்கி, பல்சர் பைக்கை பரிசாகப் பெற்றுக் கொடுக்கிறார் கருப்பு.

அந்த நிகழ்வில் நடக்கும் ஒரு குழறுபடியால் அது பழிவாங்கும் நாடகமாக மாறு கிறது. மதுரை தினேஷ், சென்னை தினேஷை எப்படிப்பட்டச் சூழ்நிலையில் சந்தித்தார், இருவருக்கும் என்னமாதிரியான தொடர்பு இருக்கிறது என்பது கதையில் மிக முக்கியமான திருப்பமாக இருக்கும். எனக்கு முதல் படம் என்பதால் பொழுதுபோக்கை முதன்மைப்படுத்தி படத்தை எடுத்திருக்கிறேன்.

தினேஷ் இரட்டை வேடத்தை எப்படிக் கையாண்டிருக்கிறார்? - கதை ஒரு ‘ரிவெஞ்ச் டிராமா’ என்றாலும் அதை 75 சதவீதம் நகைச்சுவையாகத்தான் ட்ரீட் செய்திருக்கிறேன். ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்கும் லாகவத்தை முறையாகக் கற்றுக்கொண்டு நடித்தார். தஞ்சை யில் நடந்த ஜல்லிக்கட்டில் அரசு அனுமதியுடன் ஒரிஜினலாகப் படமாக்கினோம். காமெடி நடிப்பிலும் குணசித்திர நடிப்பிலும் தினேஷ் பட்டையைக் கிளப்பக்கூடியவர்.

இதிலும் இரண்டு வெவ்வேறு கலாச்சாரப் பின்புலங்களைச் சேர்ந்த இரட்டைக் கதா பாத்திரங்களில் நல்ல ‘சேஞ்ச் ஓவ’ருடன் ஜமாய்த்திருக்கிறார். ‘லப்பர் பந்’தில் கிடைத்த வெற்றியை இந்தப் படத்தின் மூலம் தக்கவைத்துக் கொள்வார்.

வேறு யாரெல்லாம் நடித்திருக்கி றார்கள்? தொழில் நுட்பக் குழு பற்றியும் கூறுங்கள்... ரேஷ்மா வெங்கட், சென்னை தினேஷுக்கும் மதுனிகா மதுரை தினேஷுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, பிராங்ஸ்டர் ராகுல், பிரின்ஸ் அஜய் எனப் பலர் நடித்திருக்கி றார்கள். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவையும் சசி தாட்ச
படத்தொகுப்பையும் கையாண்டிருக்கிறார்கள். இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்திருக்கிறார்.

SCROLL FOR NEXT