கடந்த 20 ஆண்டுகளில் நிகழ்ந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களால், முஸ்லிம்கள் பொதுச் சமூகத்துக்கு எதிரானவர்களாகத் திரையிலும் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அதன் விளைவாக இஸ்லாமியச் சமூகம் ஜனநாயக அரசியலில் பங்குபெற வேண்டிய கூடுதல் தேவைகளும் எதிர்வினையாற்றல்களும் அவர்களுக்கு அவசியமாகிப் போயின.
மற்றொரு பக்கம், இஸ்லாமியச் சமூகம் தங்களைத் தாங்களே ஆத்மப் பரிசோதனையும் சுய பிரதிபலிப்பும் செய்துகொள்வதற்குக் கலையை ஓர் ஆயுதமாக்கும் துணிவையும் செய்திருக்கிறது. திரைப்பட வடிவத்தை நாடாத இஸ்லாமியத் தேசங்களிலிருந்துகூட படங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இந்த முயற்சிகளுக்கெல்லாம் முன்பாக ஈரானிய சினிமா அதைச் செய்தது.
இன்னும் சொல்லப்போனால் ‘உலக சினிமா’வின் தலைமையேற்பையே ஈரானியப் படங்கள் முன்னெடுத்தன என்று துணிந்து கூறலாம். அந்த வகையில் சஃபி தொகுத்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளும் நேர்காணல்களும் ஈரானிய புதிய அலை சினிமாவை நோக்கிப் பயணிப்பதற்கான நல்ல வழிகாட்டு முயற்சியாக அமைத்துள்ளன.
புதிய ஈரானிய சினிமா
தொகுப்பு: சஃபி
215 பக்கங்கள்
விலை ரூ: 200/-
புலம் வெளியீடு
சென்னை - 600005
தொடர்புக்கு: 98406 03499