‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் நாயகி ஷாலினி பாண்டேவும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடி’ படத்தில் வேறு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இருவருமே பிஸியாகிவிட்டார்கள். இதற்கிடையில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வியை விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டபோது, “இதுபற்றி நானும் இயக்குநரும் ஏற்கெனவே பேசிவிட்டோம்.
40 வயதில் அர்ஜுன் ரெட்டியின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதுதான் இரண்டாம் பாகத்தின் கதையாக இருக்கும்” என்று பதில் கூறியிருக்கிறார்.
டாக்ஸி வாலாவுக்கு பயந்து..
‘பிரேமம்’ படப் புகழ் அனுபமா பரமேஸ்வரன், சாய் தரம் தேஜ் நடித்த ‘தேஜ் ஐ லவ் யு’ திரைப்படம் இந்த மாதம் 29-ல் வெளியாக இருந்தது. ஆனால் திடீரென வெளியீடு தேதியை ஒத்திவைத்துவிட்டார் தயாரிப்பாளர். ஜூலை 1 அன்று விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘டாக்ஸி வாலா’ படத்தால் தங்கள் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் இந்த ஒத்தி வைப்பு என்கிறது டோலிவுட் வட்டாரம்.
தொகுப்பு: ஜி.எஸ்.சுரேஷ்