ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் காவல் உதவி ஆணையராக பிரபுதேவா நடித்து வருகிறார். பிரபுதேவா, இயக்குநர் மகேந்திரன், நடிகர் சுரேஷ் உள்ளிட்டவர்களின் காட்சிகள் கடந்த 2 வாரங்களாக சென்னையில் படமாக்கப்பட்டது. படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பேராசிரியர் திரு ஞானசம்பந்தம் நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சல்மான்கான், சோனாக்ஷி சின்கா உள்ளிட்ட குழுவினருன் ‘தபாங்க் தி டூர்’ என்ற கலை நிகழ்ச்சிக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறார் பிரபுதேவா. ஜூன் 22 ம் தேதி தொடங்கும் இந்தப்பயணம் ஜூலை 8 வரை நீடிக்கிறது. யு.எஸ்.ஏ, கனடா நாடுகளில் பல்வேறு நரகங்களில் இந்த கலை நிகழ்ச்சி நடக்கின்றன. அதை முடித்துக்கொண்டு சென்னை வந்ததும் ‘லஷ்மி’, சார்லி சாப்லின் 2 ரிலீஸ் உள்ளிட்ட வேலைகளிலும் பிரபுதேவா கவனம் செலுத்த உள்ளார்.