திரையரங்குகளில் புரஜெக்டர்களை நிறுவி, டிஜிட்டல் முறையில் திரையிட்டுவரும் நிறுவனங்கள் (Digital Service Providers) அதற்கான கட்டணத்தைக் குறைத்தே ஆக வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
இம்முறை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்களுடன் இணைந்திருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மார்ச் 1முதல், எந்தத் திரைப்படத்தையும் வெளிடாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
வேலைநிறுத்தத்துக்கு முன்பே பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தருகின்றன.
ஈரானிய புதிய அலை சினிமா இயக்குநர்களில் முக்கியமாவர் மஜீத் மஜீதி. அவர் இந்தியாவுக்கு வந்து, ‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தியில் தயாராகியிருக்கும் இப்படத்தின் ட்ரைலருக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட மாளவிகா மோகனனையும் வங்காளத்தைச் சேர்ந்த கௌதம் கோஷையும் சாமானிய மக்கள் கூட்டத்திலிருந்து வரும் கதையின் நாயகன், நாயகியாக அறிமுகப்படுத்துகிறாராம் இயக்குநர்.
கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை ஒரு உலக சினிமாவுக்கே உரிய கலாபூர்வத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறாராம் மஜீத் மஜிதி.
தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’ மொழிமாற்றுப் படமாக வெளியாகவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜே.டி- ஜெர்ரி இயக்கத்தில் 2003-ல் வெளியான படம் ‘விசில். ‘இந்தப் படத்தின் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்தவர் பென்டா மீடியா அனிமேஷன் நிறுவனத்தின் நிர்வாகியான அனிதா. தற்போது இவர் ஓவியா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்துக்கு இசை அமைக்க சிம்புவை அமர்த்தியிருப்பதாகத் தெரிகிறது. சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசை அமைப்பளாராகவும் சிம்பு களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்கிரண் நடித்த கதாபாத்திரத்தில் மூத்த கன்னட நடிகரான அம்பரீஷ் நடிக்க, ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார். தனுஷ் நடித்த கேரக்டரில் சுதீப் நடிக்கிறார். இந்தப் படத்தை குருதத்தா கனிகா இயக்குகிறார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தில் அஜித்துடன் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் நயன்தாரா என்ற தகவலைப் படக்குழு அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ‘லட்சுமி’, ‘மா’ குறும்படங்களின் மூலம் பிரபலமாகியிருக்கும் சர்ஜுன் என்ற அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. ‘அறம்', ‘குலேபகாவலி’ஆகிய படங்களைத் தயாரித்த கோட்டபடி ரமேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
மணிரத்னம் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், அரவிந்த்சாமி, சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் . இந்த படத்தில் ‘காற்றுவெளியிடை’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகையான அதிதி ராவ், மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் நடித்த ஆண்டனி வர்கீஸ் ஆகிய இருவரும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்களாம்.
மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படும் இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார் என்ற தகவலும் கிடைக்கிறது.