இந்து டாக்கீஸ்

அரிசி மிட்டாய்: ரஜினி வசனம் பேசிய நிக்கி

செய்திப்பிரிவு

ரஜினி வசனம் பேசிய நிக்கி

ஜீ

வா, கேத்தரின் தெரசா உள்ளிட்டோர் நடிப்பில் வரவுள்ள ‘கலகலப்பு 2’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நிக்கி கல்ரானி.

‘‘காசியில் பணிபுரியும் தாசில்தாராக நடித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 2 மாதங்கள் வீட்டை மறந்துவிட்டு, ஊர் ஊரராக சுத்தினோம். காசி படப்பிடிப்பு கொஞ்சம் பயமாக இருந்தது. கங்கை உள்ளிட்ட இடங்களில் பல மாநில பக்தர்கள் சூழ ஆன்மிக அனுபவமாகவும் இருந்தது. அதேபோல மற்றொரு பக்கம் பிணங்கள், அகோரிகள் என மிரளவும் வைத்தது. எப்போது வீட்டுக்குப் போவோம் என்று இருந்தது. ஒரு பக்கம் படத்தின் காதல் காட்சிகள், இன்னொரு புறம் சண்டைக்காட்சி, அடுத்து பாடல் காட்சி என்று மூன்றுமே ஒரே நேரத்தில் போகும். ஒவ்வொரு காட்சிக்கும் உடைகள் மாற்றிக்கொண்டு நடித்தது மறக்க முடியாத அனுபவம். ‘பக்கா’ படத்தில் ரஜினி ரசிகையாக ‘ரஜினி ராதா’ என்ற பெயரில் நடித்துள்ளேன். ரஜினி படத்தின் வசனங்களைப் பேசுவது, அவரைப் போல நடனம் ஆடியது மறக்க முடியாதது’’ என்கிறார் நிக்கி கல்ரானி.

கார்த்தியின் காதல் படம்

மீண்டும் ரகுல் ப்ரீத் சிங்

பா

ண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்துவருகிறார் கார்த்தி. இந்தப் படத்தை தொடர்ந்து, புதுமுக இயக்குநர் ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். முழுக்க காதல் களப் பின்னணியில் இப்படம் உருவாகிறது. இதில் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்கு பிறகு கார்த்தியும், ரகுல் ப்ரீத்தும் இப்படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளனர். கார்த்தி நடிக்கும் படத்துக்கு முதல்முறையாக ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்குகிறது.

ஏப்ரலில் ‘2.0’

ஆகஸ்ட்டில் ‘காலா’

ஜினிகாந்த், அக்சய் குமார் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் 3டி-யில் தயாராகியுள்ள படம் ‘2.0’. தமிழ், இந்தியில் வெளிவர உள்ள இப்படத்துக்கான இறுதிகட்ட வேலைகள் தற்போது நடந்துவருகின்றன. இந்நிலையில், ‘2.0’ படம் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதை விரைவில் உறுதி செய்ய உள்ளது படக்குழு. சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் விதமாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் 2.0 படத்தை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியிட 3டி ஸ்கிரீன் அரங்குகளின் அனுமதி ஏப்ரல் இறுதி வாரத்தில் கிடைத்திருப்பதால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளது. இதற்கிடையே, பா.இரஞ்சித் இயக்கத்தில், தான் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் வேலைகளையும் ரஜினி சமீபத்தில் முடித்துக் கொடுத்துள்ளார். எனவே, ‘2.0’ படத்தை தொடர்ந்து ஆகஸ்ட் 15-ம் தேதி ‘காலா’ படத்தையும் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT