இந்து டாக்கீஸ்

நிருபர் டைரி: ‘கரிகாலன்’ கைவிடப்பட்டது ஏன்?

ஸ்கிரீனன்

எல்

.ஐ.கண்ணன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘கரிகாலன்’. அரசர் காலத்து விக்ரம் கெட்-அப் அடங்கிய போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இப்படத்தின் கதையைக் கேட்டு மிகவும் பிடித்துவிடவே ஒப்பந்தமானார் விக்ரம். முதலில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. பின்னர், காட்சிகள் எப்படி வரும் என்று புகைப்படத்தை வைத்துப் பணிபுரிந்து காட்டவே, விக்ரமுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

முதல் கட்டமாக 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். முழுக்க க்ரீன் மேட் பின்னணியைக் கொண்டே மொத்த படப்பிடிப்பும் நடத்தினார்கள். அப்போது, தொடர்ச்சியாக க்ரீன் மேட் பின்னணியிலே பணிபுரிந்து வருகிறோம், இரண்டு நிமிடக் காட்சிகளை மட்டும் எப்படி வரும் என்று காட்டினீர்கள் என்றால் தொடர்ந்து நடிக்கச் சிறப்பாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார் விக்ரம்.

சில நாட்களுக்குப் பிறகு சில விநாடி காட்சிகளையே காட்டினார்கள். இதற்கே இவ்வளவு காலம், ஒட்டுமொத்த படத்துக்கும் வருடக்கணக்குமே என்று விக்ரம் கேட்டிருக்கிறார். ஏனென்றால் முழுக்க பிரபல ஹாலிவுட் படமான ‘300 ஸ்பார்டன்ஸ்’ படப் பாணியில் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

“160 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, அதனை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டு தயாரிப்பாளருக்கு லாபம் கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகத் தெரிகிறது. ஆகையால், படத்தைக் கைவிடுவதே சரி” என்று விக்ரம் கூறியவுடன், ‘கரிகாலன்’ படக்குழு படத்தைக் கைவிட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT