ஆறாம் அறிவு

உங்கள் வீடியோக்களை அன்லிமிடடாகப் பதிவேற்ற வேண்டுமா?

செய்திப்பிரிவு

ம் நினைவுகளின் பிரதிபலிப்பாகத் திகழும் போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகம். அப்படி நாம் மொபைலில் எடுத்த போட்டோக்களையும் வீடியோக்களையும் சேமித்துவைக்க மொபைலில் இடம் போதாது என்பதால் கூகுள் போட்டோஸை நாடவேண்டியிருந்தது. ஆனால், அதிலும் குறிப்பிட்ட ஸ்டோரேஜ் மட்டுமே உள்ளது. அதற்கு மேல் நாம் பதிவேற்ற விரும்பினால் அதற்கு கூகுள் போட்டோஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஸ்டோரேஜில் சில போட்டோக்களை டெலிட் செய்தும் போதுமான இடம் கிடைக்கவில்லை என்றால் பெரிய அளவில் இருக்கும் வீடியோக்களை டெலிட் செய்கிறோம். இதனால் தற்காலிகமாகக் கொஞ்சம் இடம் கிடைக்கிறது.

நாம் எடுக்கும் வீடியோக்களை ஸ்டோரேஜுக்காக டெலிட் செய்யாமல் அன்லிமிடட்டாக ஸ்டோர் செய்ய வேறு ஏதாவது வழியிருக்கிறதா? ஆம், இதே கூகுளில் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. யூடியூபில் அடுத்தவர் பார்க்காமல் நம் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் நம் வீடியோக்களை பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியும். அதுவும் அன்லிமிடட் ஸ்டோரேஜில்! அதற்கான வழிமுறைகள்.

SCROLL FOR NEXT