ஆறாம் அறிவு

இரு இணைய அகராதிகள்

ஆர்.ஜெயக்குமார்

மொழிபெயர்ப்பு ஒரு கலை. அது ஒரு படைப்புச் செயல்பாடும்கூட. ஆனால், இன்றைக்கு அது தேவையாகிவிட்டது. இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்களை நாம் எளிதில் படித்துத் தெரிந்துகொள்ள மொழிபெயர்ப்பை நாம் தெரிந்திருக்க வேண்டியதிருக்கிறது. அதனால் ஒரு அகராதியும் (Dictionary) நமக்கு அவசியமாகிறது.

அதுபோல் படிக்கும் மாணவர்களுக்கும் தங்கள் பாடம் தொடர்பாகச் சில விஷயங்களை விளங்கிக்கொள்ள அகராதி அவசியம். இதற்காக முன்புபோல் கனத்த ஆங்கில-தமிழ் அகராதியைத் விரித்துப் பார்த்து பென்சிலில் குறித்துக்கொள்ள வேண்டியதில்லை. இப்போது இணையத்தில் பல அகராதிகள் கிடைக்கின்றன. வேண்டிய சொல்லை இடுகையை இட்டால் போதும், அது தொடர்பான பொருட்கள் பல வந்து திரையில் விழும்.


இணையத்தில் ஆங்கிலம்-ஆங்கிலத்துக்கான அகராதிகள் பல கிடைக்கின்றன. ஆனால், அதை ஒப்பிடும்போது தமிழ்-ஆங்கில அகராதிகள் குறைவு. கூகுளின் இலவசச் சேவையான கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் அகராதியாக இருக்கிறது. இதில் தமிழ் மட்டுமல்லாது நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளுக்கான அகராதியாக அது இருக்கிறது. ஆனால் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் அவ்வளவு சரியான பொருளை அளிப்பதில்லை. ஓரளவுக்குத்தான் அது பொருள் தரும். இந்நிலையில் நம்பகமான சில ஆங்கிலம்- தமிழ் இரு அகராதிகளைப் பார்க்கலாம்.

தமிழ்க்யூப் என்னும் இலவச ஆங்கிலம் - தமிழ் இணைய அகராதி, நம்பகமான ஒன்றாக இருக்கிறது. அதுபோல் பல ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ப் பொருளை இது தருகிறது. இதில் தமிழ் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றுக்குமான அகராதி இருக்கிறது.

அதன் சுட்டி: http://dictionary.tamilcube.com/

அடுத்த ஐரோப்பிய அகராதி யூடிக்ட் என்னும் பெயரில் இணையத்தில் கிடைக்கிறது. இதில் ஆங்கிலம் - தமிழ் அகராதி நம்பகத்தன்மையுடன் இருக்கிறது. மேலும் தமிழ்-ஆங்கிலம், தமிழ்-ஜெர்மன் அகராதிகளும் கிடைக்கிறது.

https://eudict.com/

SCROLL FOR NEXT