பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களையும் அத்வைத நெறியில் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான எளிமையான வழிகாட்டியாக இந்நூல் விரிகிறது.
எல்லா உயிர்களுக்கும் உண்பது, உறங்குவது, அஞ்சுவது, தன்னுடைய இனத்தைப் பெருக்குவது ஆகியவை பொதுவான அம்சங்களாக இருக்கின்றன. நன்மை எது, தீமை எது, உண்மை எது, பொய் எது என்பதை ஆராய்ந்து பார்த்து முடிவுசெய்யும் பகுத்தறிவு மனிதனுக்கு மட்டுமே இருக்கும் சிறப்பாக இருக்கிறது.
இந்த அறிவை, புத்தியைச் சரியாகத் தன்னுடைய நலனுக்கும் தன்னைச் சார்ந்தவர்களின் நலனுக்கும் தான் வாழும் இந்த உலகத்தின் நன்மைக்கும் ஒருவர் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை, கீதா ஸாரத்தின் ஸ்லோகங்களின் விளக்கத்துடன் வழங்குகிறது இந்நூல்.
கீதா ஸாரம் - ஸ்ரீமத் பகவத் கீதையின் கருத்துப்பிழிவு; க.மணி; அபயம் பப்ளிஷர்ஸ், தொடர்புக்கு: 90956 05546.