ஆனந்த ஜோதி

மீனும் நானும்

செய்திப்பிரிவு

ஹபீஸ்

அவ்வப்போது நானும் மீனும்

மௌன மொழியில்

உரையாடுவோம்:

ஒருவரின் கண்களை ஒருவர் பார்த்துச்

சிரிப்போம்

அவை என்னிடம் எப்போதும் சொல்வது

இதைத்தான்.

“ஹபீஸ், நம் இருப்பின் மகிழ்ச்சி

உனக்குத் தெரிகிறதை

நாங்களும் காண்கிறோம்.

இந்த உலகம்

இந்த மனம்

இங்குள்ள கடன்கள்

இங்குள்ள ஜீவனாம்சம்

என்று எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கும்

தியானத்தை நீ கண்டறிந்தவன்.

அதனால் எங்களைப் போல

நீயும் கடவுளின் நிறைபோதையில் களித்திரு.”

SCROLL FOR NEXT