ஆனந்த ஜோதி

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 01.09.2020 முதல் 21.03.2022 வரை - துலாம் ராசி வாசகர்களே

செய்திப்பிரிவு

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ஈரப் பார்வையால் அனை வரையும் தன் வசம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களே உங்களுக்கு 01.09.2020 முதல் 21.03.2022 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும், கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு வருமானத்துக்கு வழியே இல்லாமல் தடுமாற வைத்த ராகு பகவான் இப்போது எட்டாம் வீட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல் பட்ட உங்கள் மனம் இனி அமைதியடையும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனிப் பரபரப்பாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். உடல்நலத்தில் அக்கறை தேவை. நோய்த் தொற்று வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. காய்ச்சல், சளித் தொந்தரவு இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. உணவு விஷ யத்தில் காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

மிருகசீரிஷம் நட்சத்தி ரத்தில் 01.09.2020 முதல் 04.01.2021 வரை ராகுபகவான் செல்வதால் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பழைய கடன் பிரச்சினையைத் தீர்க்க முயல்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் 05.01.2021 முதல் 12.09.2021 வரை ராகுபகவான் செல்வதால் உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்த அழைப்பு வரும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் 13.09.2021 முதல் 21.03.2022 வரை செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், அரசால் நெருக்கடிகள், முன்கோபம், வீண் டென்ஷன் வந்து செல்லும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கி களை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்க ளின் ஆதரவு கிட்டும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். புது ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகும். உத்யோகத்தில் இருக்கின்ற வேலையைத் தக்கவைத்துக்கொள்ளப் பாருங்கள். மேலதிகாரியின் அடக்கு முறை மாறும். சலுகைகளுடன், பதவியும் உயரும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்துகொண்டு மன தைரியத்தையும், தன்னம்பிக்கை யையும், விடாமுயற்சியையும் கொடுத்து வந்த கேது பகவான் இப்போது ராசிக்கு இரண்டாம் வீட்டில் நுழைகிறார். பல்வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். மகனின் கல்யாணப் பேச்சு வார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கி திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

கேட்டை நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 10.05.2021 வரை கேதுபகவான் செல்வதால் வருமானம் உயரும். பாகப் பிரிவினை சாதகமாக முடியும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த-பந்தங்கள் உங்கள் வளர்ச்சி கண்டு வலிய வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். புதிதாக மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலைக்கு முயன்றீர்களே! நல்ல பதில் வரும்.

அனுஷம் நட்சத்திரத்தில் 11.05.2021 முதல் 16.01.2022 வரை கேது செல்வதால் புதிய யோசனைகள் பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழிச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மகளுக்குத் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனின் பொறுப்புணர்வு அதிகமாகும். அவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

விசாகம் நட்சத்திரத்தில் 17.01.2022 முதல் 21.03.2022 வரை செல்வதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள், தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை வந்து நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். தங்க நகைகளை இரவல் தர வேண்டாம். சிலர் உங்களைத் தவறான போக்குக்குத் தூண்டுவார்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து போகும். இந்த ராகு கேது மாற்றம் புது அனுபவங்களைத் தருவதுடன், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொள்ள வைக்கும்.

பரிகாரம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அமர்ந்திருக்கும் ஸ்ரீநாகராஜரைச் சென்று வணங்குங்கள். சுபிட்சம் பெருகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT