ஆனந்த ஜோதி

சித்திரப் பேச்சு: ஒப்பனையுடன் ஓர் அழகி

செய்திப்பிரிவு

ஓவியர் வேதா

இந்த இளம் பெண்ணைப் பாருங்கள். எவ்வளவு வித்தியாசமாகத் தனது தலைமுடியைக் கொண்டைபோல முடிச்சிட்டுள்ளாள். காதுமடல் மேலே தாமரைப்பூ போன்ற ஓர் அணிகலன், உட்பகுதியில் பூ போன்ற அணிகலன்... கர்ண துவாரத்தில் நீண்ட வளையம் போன்ற காதணி... மார்பிலும், தோள்களிலும் முத்து மணியாரங்களும், கைகளிலும் விதம் விதமாக வளையல்களும், வங்கிகளும் அணிந்திருக்கிறாள். இடையில் கூட ஆடைக்கு மேல் வித்தியாசமாக ஆபரணங்களைப் பூண்டுள்ளாள்.

தண்டையும், கொலுசும் அணிந்துள்ள கால்களைப் பாருங்கள் இன்றைய குதிகால் உயரச் செருப்பு போன்ற உயரமான செருப்பை அணிந்துகொண்டு இவள் எங்கே செல்கிறாள். தலைவனைக் காணச் செல்வாளாக இருக்கும். தனது அலங்காரம் சரியாக உள்ளதா என்று தோழியிடம் ஒற்றை விரலைக் காட்டி நடந்து கொண்டே கேட்கும் பாவம் அற்புதமானது. இன்றைய நவநாகரிகத்தின் மொத்த அடையாளமாக 14-ம் நூற்றாண்டில் பராக்கிரமபாண்டியனின் காலத்திலேயே இருந்ததை மிகவும் பிரம்மாண்டமாகவும், துல்லியமாகவும் இச்சிலையை தென்காசி, காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் வடித்துள்ள சிற்பியை என்ன சொல்லிப் பாராட்டுவது.

SCROLL FOR NEXT