தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள நாயகர் மண்டபத்தில் இடுப்பிலே கையை வைத்துக் கொண்டு ஒய்யாரமாக சாமரம் வீசும் பெண்ணின் சிற்பம் மூலைத் தூணில் உள்ளது. இவளைப் பார்த்தால் சாதாரண பணிப்பெண்ணாகத் தெரியவில்லை.
அவள் தலையில் சூடியுள்ள மகுட மும், பின்புறம் உள்ள வட்ட வடிவச் சுருண்ட கேசமும், காதில் உள்ள குண்டலங்களும், மார்பிலும் இடையிலும் இருக்கும் மணியாரங்களும் மற்றும் கைகளில் உள்ள வங்கிகளும் வளையல்களும் அவளை அரசகுலத்து மாதாகக் காட்டுகின்றன. அவள் கையில் உள்ள வெண்சாமரம் தெய்வங்களுக்கானதைப் போல உள்ளது.
பெண்ணின் முக லட்சணமும், புன்னகையும், இடுப்பை வளைத்து சொகுசாக நிற்கும் கோலமும் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அளவுக்கு வடித்த சிற்பியை மனதார வாழ்த்தத் தோன்றுகிறது.
இந்த ஆலயம், பொது ஆண்டு 1178-ல் குலோத்துங்கச் சோழனால் கட்டுவிக்கப்பட்டது. n ஓவியர் வேதா n