சடலத்தை எரித்தபின்னர் வெளியேறும் உயிருடன் செல்லும் நுண்ணுடல். உயிரின் தொடர் வாழ்வில் லிங்கசரீரம் ஒரு முக்கிய இணைப்பாகும். ஏனெனில் ஒருவரின் உடல் ரீதியான மரணத்தால் அது அழிவதில்லை. இறுதியில், பரமாத்மாவுடன் கலக்கும்வரை, சம்சார முழுவதும் அது தொடர்ந்திருக்கிறது.
நபிமொழி
உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதன் செயலையும் அதன் வாழ்வாதாரத்தையும், அதன் வாழ்நாளையும் , அது துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் எழுது' என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் நற்செயல் புரிந்து கொண்டே செல்வார்.
எந்த அளவுக்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். ஒருவர் தீய செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்துக்குமிடையே ஒரேயொரு முழம் தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.
ஆசையற்றதே ஞானம்
ஆசையற்றிருத்தலே ஞானம். இரண்டும் வேறு வேறல்ல; ஒன்றே. எந்தப் பொருளிலிலும் சாயாமல் மனத்தைத் திருப்புவது ஆசையின்மையே. வஸ்து எதுவும் தோன்றாத நிலையே ஆசையின்மை. தன்னைத் தவிர வேறெதையும் தேடாமல் இருப்பதுதான் பற்றின்மையும் ஆசையின்மையும் ஆகும்; தன்னை விட்டு விலகாதிருத்தலே ஞானம்.
- ரமண மகரிஷி