ஓவியர் வேதா
சிவபெருமானோடு ஆனந்தத்துடன் நடனம் ஆடவந்தவர் அல்ல. கோபத் தோடு போருக்குப் புறப்பட்டவர் போலத் தெரிகிறார். கண்களின் கோபவெறியும் நீண்டிருக்கும் கோரைப்பல்லும் இதை உறுதிப்படுத்துகின்றன.
கம்பீரமான உடல்பாங்கில் இவர் வீரபத்திரரை நினைவுபடுத்துகிறார். ஒரு கையில் போருக்கான ஆயுதங்கள், இன்னொரு கையிலோ கிளி; மென்மையையும் கிளி புலப்படுத்துகிறதோ.
காளியின் நடை, தரையை அதிரவைக்கக்கூடியது. மார்பில் புரளும் மணிமாலைகளும் இடை அணிகலன்களும் அந்த அசைவுகளைத் துல்லியமாகக் காட்டுகின்றன.