ஆனந்த ஜோதி

சித்திரப் பேச்சு: மாயக் கோலத்தில் கஜசம்ஹாரமூர்த்தி

செய்திப்பிரிவு

ஓவியர் வேதா

கஜசம்ஹார மூர்த்தி, தலையை ஒருபக்கமாகச் சாய்த்தும் கழுத்து முதல் இடுப்புவரை நேராகவும் இடுப்புக்குக் கீழே பின்புறத்தைக் காட்டியபடி ஒரு காலைத் தூக்கியபடி, திரிபங்கத் தோற்றத்தில்தான் பெரும்பாலான சிற்பங்களில் காணப்படுவார்.

கோவை திருப்பேரூரில் உள்ள மூர்த்தியோ அங்கவளைவுகள் இல்லாமல் நேரடியாக நம்மை உற்றுப்பார்க்கிறார். வலது கால் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

யானையின் தோலைக் கிழித்து விரித்து திரைச்சீலை போலப் பிடித்துக்கொண்டிருக்கிறார். காலையில் யானையின் தலை உள்ளது.

நான்கு புறமும் யானையின் கால்கள்; மார்பில் உள்ள அணிகலன்கள் அசைவது போல் உள்ளன. யானையின் தோல் உட்குழிவாக இயற்கையாகத் தெரிகிறது.

வால்பகுதியும் தும்பிக்கையும் வலியால் ஏற்படும் அசைவுகளைப் பிரதிபலிக்கின்றன. இதை வடித்த அந்தச் சிற்பி ஒரு ஜால ரசவாதியாக இருக்க வேண்டும்.

SCROLL FOR NEXT