ஓவியர் வேதா
பொதுவாக எல்லா இடங்களிலும் விநாயகர் அமர்ந்த வடிவில் தான் காட்சியளிப்பார். சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் வித்தியாசமாக அவருக்கேயுரிய பாசம், அங்குசம், மோதகம், தந்தம் எதுவும் இல்லாமல் நின்ற கோலத்தில் காணப்படுகிறார். வலது கையில் அட்சமாலையும் மேல் கரத்தில் நெற்கதிரும் இடது கையில் வீணையும் மேல் கரத்தில் தாமரையையும் தாங்கியிருக்கிறார். இடுப்பில் நாகாபரணம் உள்ளது.
நெற்கதிரில் நெல்மணிகள், அட்சமாலையின் ருத்திராட்சம், நாகத்தின் முகவமைப்பு சீராக வடிவமைக்கப்பட்டுள்ளன. கணநாதருக்கேயுரிய உருண்டு திரண்ட பேழை வயிறும் தலை முதல் பாதம்வரை ஆடை அணிகலன்களும் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன.
அருணகிரி நாதர் பாடிய தலம் இது. சுந்தர சோழரின் அமைச்சர் அன்பில் அநிருத்த பிரம்மராயரால் கட்டப்பட்டது.