இளவரசியைக் கடத்திக் கொண்டுபோகும் குறவனின் நுண்ணிய சிற்பம் கிருஷ்ணாபுரம் ஆலயத்தில் உள்ளது. நாயக்கர் கால வேலைப்பாடுகளும் அங்கலட்சணங்களும் அருமை.
தோளில் உள்ள இளவரசியின் பாரத்தால் குறவனின் உடல் சற்று வளைந்திருக்கிறது. வலது கையில் வாளும் இடது கையில் வில்லும் கம்பீரமாகக் காணப்படுகின்றன. குறவனின் தோளில் உள்ள இளவரசி முகத்தில் மகிழ்ச்சி கூத்தாடுகிறது. சுருண்ட தலைக்கொண்டையைப் பிடித்திருக்கிறாள்.
குறவன் வீரன் என்பதை உடம்பின் ஒவ்வொரு அங்கமும் சொல்கிறது.