ஆனந்த ஜோதி

அண்ணாமலைக்கு அரோகரா

செய்திப்பிரிவு

பூவுலகில் நினைத்தாலே முக்தியை அளிக்கும் தலம் திருவண்ணா மலை. கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் முதலும் முடிவும் இல்லாத சிவன் அக்னி வடிவாக காட்சி அளித்த தலம் இது.

ஒன்று பலவாகி பலவும் ஒன்றாக உறையும் மகிமையை வெளிப்படுத்து வதே கார்த்திகை தீபத்தின் மறைபொருள். மகா தீபத்துக்கு முன்பாக அண்ணாமலையார் முன்பாக ஒரு தீபம் ஏற்றப்படும் அதன்பின் அந்த தீபத்திலிருந்து ஐந்து தீபங்களை ஏற்றுவர்.

மீண்டும் அனைத்து தீபங்களையும் அண்ணாமலையார் முன் ஒன்றாக்குவர். இது ஏகனாகிய சிவபெருமான் அனேகனாகி மீண்டும் ஏகனாகும் தத்துவத்தை உரைப்பதாகும்.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் போது மட்டுமே ஆலயத்தில் உற்சவர்களான பஞ்ச மூர்த்திகளும் தீப மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர்.

ஆணும் பெண்ணும் சமம் எனும் தத்துவத்தை உணர்த்தும் அர்த்தநாரீஸ்வர தரிசனமும் அன்றைக்கு தீப மண்டபத்தில் கிடைக்கும். அதோடு மகா தீபம் ஏற்றப்படும் கொப்பரையிலும் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் வரையப்படும்.

SCROLL FOR NEXT