ஓவியர் வேதா
நீராடிவிட்டு வந்திருப்பாள் போலும். நிற்கும் பாங்கு நடனமாது என்பதைத் தெரிவிக்கிறது. தன் நீண்ட கூந்தலின் நுனிப்பகுதியை முடிச்சிட்டிருக்கிறாள்.
இடதுகையில் கண்ணாடியை லாகவமாகப் பிடித்திருக்கிறாள். வலதுகையைத் தூக்கி நெற்றியில் திலகமிடுவது ஒரு அபிநயம் போலுள்ளது.
அந்தச் செயலால் ஏற்பட்ட அசைவு கூந்தலிலும் ஆடைகளிலும் பிரதிபலிப்பதுபோல் சிற்பி படைத்துள்ளார்.
இது கற்சிலையா களிமண் சிலையா என்னும் அளவுக்கு நெளிவுசுளிவுகள் தத்ரூபமாக உள்ளன. இந்த நடனமாதின் சிற்பம் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ளது.