ஆனந்த ஜோதி

முல்லா கதை: அதிர்ஷ்டமான விபத்து

செய்திப்பிரிவு

முல்லாவின் கழுதை தாகத்தால் ஒரு குளத்தில் இறங்கி நீர் குடித்தது. ஆனால், படிக்கட்டுகள் செங்குத்தாக இருந்த நிலையில் தடுமாறி குளத்துக்குள் விழுந்தது.

கழுதை விழுந்த நிலையில் அங்கிருந்த தவளைகள் அதீதமாகச் சத்தமிடத் தொடங்கின. தவளைகள் போட்ட சத்தத்தால் பயந்துபோன கழுதை, தறிகெட்டுப் போய் குளத்திலிருந்து வேகவேகமாக மேலேறி வந்துவிட்டது.

இதைப் பார்த்த முல்லாவுக்கு கழுதை திரும்பக் கிடைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ‘நீங்கள் எனக்கு ஒரு நல்ல திருப்பத்தைக் கொடுத்தீர்கள்.

மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று முல்லா தனது அங்கியிலிருந்து நாணயங்களை எடுத்து குளத்தில் எறிந்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

- ஷங்கர்

SCROLL FOR NEXT