ஆனந்த ஜோதி

சித்திரப் பேச்சு: பழந்தமிழர் வாழ்க்கையின் பிரதிநிதி

செய்திப்பிரிவு

ஓவியர் வேதா

குறமகனைப் போலத் தோற்றமிருந்தாலும் நகர்வலம் வரும் சேவகன் என்பதை அவன் கையிலுள்ள தண்டம் உணர்த்துகிறது. மற்றொரு கையில் முறுக்கு போன்ற தின்பண்டம் பலவற்றை ஒன்றாக ஒருகையில் கோத்திருப்பதுபோல் உள்ளது.

அவன் காலருகே ஒரு கிளி ஏக்கத்துடன் தின்பண்டத்தைப் பார்க்கிறது. பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் இந்த சிற்பத்தை அசாதாரணமாக்குவது அவன் காலில் அணிந்திருக்கும் செருப்புதான்.

காலின் பெருவிரலுக்கு மட்டும் ஒரு வளையமும் அதோடு இணைந்த வாரும் பின்புறம் செருப்போடு இணைக்கப்பட்டுள்ளது. முன்புறம் பட்டையாகவும் பின்புறம் அரைவட்ட வடிவில் செதுக்கப்பட்டிருப்பதையும் நடக்கும்போது செருப்பில் ஏற்படும் நெளிவு சுளிவுகளும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.

சாமானியத் தமிழரின் வாழ்க்கையிலிருந்து செதுக்கப்பட்டிருக்கும் இந்தச் சிற்பம் புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வேணுவன நாதர் கோயிலில் உள்ளது.

SCROLL FOR NEXT