ஆனந்த ஜோதி

சித்திரப் பேச்சு: சிறுபாலகர் ஆஞ்சநேயர்

செய்திப்பிரிவு

ஓவியர் வேதா

வானமாமலை பெருமாள் கோயில் தூண் ஒன்றில் காணப்படும் இந்த அனுமரின் பெயர் அஞ்சலி வரதஹஸ்த ஆஞ்சநேயர். இவர் முகமும் உருவமும் சிறுபாலகனின் உருவில் படைக்கப்பட்டுள்ளது.

முகத்தில் சிரிப்பும் கண்களில் மகிழ்ச்சியுமாக உருவாக்கப்பட்டுள்ளார். காதுகளில் கர்ண துவாரமும் காதணியின் திரட்சியும் சிறப்பாக அமைந்துள்ளன. வாலில் காணப்படும் மணியில்கூட, உட்புறம் குழிவாகக் காணப்படுகிறது.
அஞ்சனையின் மைந்தன் எத்தனை பெரியவன்? இங்கே அடக்கமாகக் காணப்படுகிறான். முகத்திலோ மந்தகாசம்.

SCROLL FOR NEXT