ஓவியர் வேதா
தென்திருப்பேரை திருத்தலத்தில் தூணில் அரை அடியில் அமைந்துள்ள அழகிய சிற்பம் இது. ’கஜேந்திர மோட்சம்’ காட்சியின் நீட்சியாக உள்ளது.
முதலையின் வாயிலிருந்து காப்பாற்றப்பட்ட பின்னரும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத யானை, முதலையைப் பார்த்து பயந்தபடியே நடுங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு தாயைப் போல இரு கைகளாலும் அரவணைத்துத் தட்டிக் கொடுக்கும் பாவத்தில் மகாவிஷ்ணுவின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இறைவனைக் கண்டு முதலை அடங்கி ஒடுங்கியுள்ளது. அரை அடி உயரச் சிலையில் விஷ்ணுவின் கிரீடம், சங்கு சக்கர ஆயுதங்கள், அணிகள், ஆடைகள் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன.
இறைவனின் கருணைமுகம், யானை, முதலையின் முகபாவங்கள் தத்ரூபமாக அமைந்துவிட்டன. நேரிலும் கண்டு ஆராதிக்க வேண்டிய ஒன்றாகும்.