இவள் மூங்கில் கூடையை வைத்தி ருக்கும் பாங்கைப் பாருங்கள். ஒரு குழந்தையையும் வைத்திருக்கிறாள். தலைக்கொண்டையில் ஆங்காங்கே பூக்கள் நேர்த்தியாகத் தெரியும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளன. திருச்சி - திருவானைக்கா ஆலயத்தில் உள்ள சிலை இது.
1970-களில் நடுத்தர வயதுப் பெண்கள் கரிய வலைபோட்டு பெரிய கொண்டை போடுவது மோஸ்தராக இருந்தது. அந்த வலையில் சிறிய பூக்களும் இருக்கும். அவர்களுக்கு முன்னோடியாக இவள் இருந்திருக்கலாம்.
கையில் டம்பப்பை போல இருக்கும் மூங்கில் கூடையின் வேலைப்பாடு களும் தத்ரூபமாகத் தெரிகின்றன. இந்தக் குறமகள் யார்?
- ஓவியர் வேதா