நவராத்திரி திருவிழாவை ஒட்டி பொதிகைத் தொலைக்காட்சியில் பல்வேறு துறை சார்ந்த மேதைகளின் நிகழ்ச்சிகளையும் பேட்டிகளையும் ஒளிபரப்ப இருக்கின்றனர். `எங்கெங்கு காணினும் சக்தியடா’ எனும் தலைப்பில் இந்த நிகழ்ச்சியைக் கருத்தாக்கத்துடன் ஒருங்கிணைக்கிறார் சங்கர் வெங்கட்ராமன்.
அரி கதை விற்பன்னர் சரஸ்வதி பாய், எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி அம்மாள், vவின் முதல் இசையை வானொலியில் பாடிய டி.கே.பட்டம்மாள், கே.பி.சுந்தராம்பாள், நாட்டிய மேதை டி.பாலசரஸ்வதி, ருக்மிணி தேவி அருண்டேல், டாக்டர் ஒய்.ஜி.பி., அம்புஜம் கிருஷ்ணா, எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரைப் பற்றிய சுவையான தகவல்கள், மறக்க முடியாத அவர்களின் நினைவுகளை அசைபோடும் நிகழ்ச்சியாக இது அமையவிருக்கிறது. ஒன்பது நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சிகள் இரவு 10.30 மணிக்கும் மறு நாள் காலை 10.10 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.t