ஆனந்த ஜோதி

முல்லா கதைகள்: வெளியே இதமாய் இருக்கிறது

செய்திப்பிரிவு

முல்லா அப்போதுதான் கட்டிலுக்கு வந்து நன்றாகப் போர்த்தி உறங்குவதற்கு ஆயத்தமானார்.அப்போது அவரது மனைவி, “வெளியே குளிராக இருக்கிறது. திறந்திருக்கும் ஜன்னல் கதவை அடைத்து வாருங்கள்” என்றார்.
முல்லா, காது கேட்காதது போலத் திரும்பிப் படுத்துக் கொண்டார். உறக்கம் வந்தவரைப் போல நடித்தார்.
சில நிமிடங்கள் கழித்து, “முல்லா, படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலை மூடிவிட்டு வாருங்கள். வெளியே குளிராக இருக்கிறது.” என்றார் அவரது மனைவி மீண்டும்.

திரும்பத் திரும்ப முல்லா புறக்கணித்தார். நான்காம் முறையாக மனைவி முல்லாவை ஜன்னலை அடைத்துவரச் சொல்ல, முல்லா வேறுவழியே இன்றி, படுக்கையிலிருந்து எழுந்தார். வேகமாக ஜன்னலை நோக்கிச் சென்று, கடுப்புடன் தடாலென்று கதவை அடைத்துச் சாத்தினார். படுக்கைக்கு வந்து கண்களை போர்வையை போர்த்திக் கொண்டார்.
“இப்போதுதான் வெளியே இதமாக இருக்கிறது?” என்றார் முல்லா.

- ஷங்கர்

SCROLL FOR NEXT