ஆனந்த ஜோதி

விநாயகருக்குள் விருட்சம்!

செய்திப்பிரிவு

யுகன்

பற்றி எரியும் உலகத்தின் நுரையீரலான அமேசான் காட்டுத் தீயை அணைக்க ஆயிரக்கணக்கான வீரர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு புறம், பசுமையை புவி மீது போர்த்துவதற்கான பணிகள் நாடெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த வேளையில், இறை நம்பிக்கையின் மூலமும் பசுமையைப் பரப்பும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன சென்னையைச் சேர்ந்த ரோடராக்ட் - ரோட்டரி கிளப் அமைப்புகள். இதை விளக்கும் ஒரு சிறிய காணொலியையும் வெளியிட்டிருக்கின்றனர் இந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத களிமண் விநாயகர் சிலைகளை இவர்கள் உருவாக்கி வருகின்றனர். இதைத்தான் தெருவுக்கு தெருவுக்கு செய்து விற்கிறார்களே என நினைக்கலாம். இவர்கள் களிமண்ணால் உருவாக்கும் விநாயகர் சிலைகளுக்கு உள்ளேயே விதைப்பந்துகளை வைத்து உருவாக்குவதுதான் இவர்கள் செய்யும் புதுமை. விநாயகரை பூஜித்தபின் தொட்டியிலோ பானையிலோ இந்த விநாயகரைக் கரைத்தால்கூட போதும். விநாயகருக்குள் இருக்கும் விதைகள் முளைவிட்டு வளரும், நாளை விருட்சமாகும்!

SCROLL FOR NEXT