மார்டின் லிங்ஸ் எழுதியிருக்கும் முஹம்மத் நபிகளின் வாழ்க்கை வரலாறு 1983-ல் வெளியானது. அரேபிய வரலாற்றின் பின்னணியில் முஹம்மத் நபியின் பிறப்பையும் வாழ்க்கையையும் பேசும் இந்நூல் நபிகளின் வாழ்க்கை சார்ந்து எழுதப்பட்ட முதன்மை நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அப்துல் ஜப்பார் முஹம்மத் ஸனீர் மொழிபெயர்த்திருக்கும் இந்நூல் எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் அரபு மொழியில் எழுதப்பட்ட சீறா எனப்படும் வாழ்க்கை வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இவை நபிகளாரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை நினைவுகூர்கின்றன.
முஹம்மத் நபிகளாரின் உரையாடலை நேரில் கேட்டு, அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களுக்கு நேரடிச் சாட்சியாக இருந்த ஆண்களும் பெண்களும் கூறிய வார்த்தைகளை வெளிப்படுத்தும் முக்கியப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது.
‘முஹம்மத் – மூலாதார நூல்களின் அடிப்படையில் நபிகளாரின் வாழ்வும் பணியும்’ என்னும் இந்த நூல் தனது ஆதாரங்களை நுட்பமாகவும் விரிவாகவும் பயன்படுத்துவதில் பெரிதும் நேர்மை காட்டுகிறது. அதில் விவரித்துச் சொல்லப்படும் பாணி புரிந்துகொள்வதற்கு எளிதாக இருக்கிறது.
‘முஹம்மத் – மூலாதார நூல்களின் அடிப்படையில் நபிகளாரின் வாழ்வும் பணியும்’
மார்டின் லிங்ஸ்
மாற்றுப் பிரதிகள்
தொடர்புக்கு : 04332-273055
விலை : ரூ. 350/-