ஆனந்த ஜோதி

வார ராசி பலன்கள் ஆகஸ்ட் 22 முதல் 28 வரை ( மேஷம் முதல் கன்னி வரை)  

செய்திப்பிரிவு

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் நட்பு சஞ்சாரத்தால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்களால் லாபம் கிடைக்கும். மகிழ்ச்சிகரமான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களின் வருகை சந்தோஷம் தரும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள்.

பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு, நிதானமாகப் பேசுவது நன்மை தரும். கலைத் துறையினருக்கு, பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு, எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலன்தரும். மாணவர்களுக்கு, சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாகத் தோன்றும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: முருகனை வணங்கி வர மனோதைரியம் கூடும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தனவாக்குக்கான அதிபதி புதன் சஞ்சாரத்தால் வாக்கு பலிக்கும். பேச்சில் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பயணங்களின்போது உடைமைகளைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர் வழியில் நல்ல தகவல் வந்து சேரும்.

கணவன் மனைவிக்குள் இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் உங்கள் ஆன்மிக ஆலோசனைகளால் பிறர் பலன் பெறுவார்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். பெண்களுக்கு, மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். கலைத் துறையினருக்கு, பொருளாதார ஏற்றம் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆசிரியர்களிடம் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: அய்யப்பனை வணங்கி வர எல்லாப் பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் வேககாரகன் ராகுவின் சஞ்சாரத்தால் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பதற்கான புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் வந்து நீங்கும்.

குழந்தைகளின் எதிர்காலத்துக்கான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றப் பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு, மிகவும் கவனமாகப் பாடங்களைப் படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
எண்கள்: 2, 5.
பரிகாரம்: நவக்கிரகத்தில் சூரியனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடச் செல்வம் சேரும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் சஞ்சாரத்தால் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். வீடு, மனை தொடர்பில் பலன்கள் கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபார முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சலைச் சந்திக்கலாம். அலுவலகப் பணிகளில் படபடப்பைத் தவிர்க்க வேண்டும்.

பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல் கேட்டு நடப்பது மனதிருப்தியைத் தரும். உறவினர்கள், நண்பர்களால் நன்மை நடக்கும். பெண்களுக்கு, உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவுவீர்கள். கலைத் துறையினருக்கு, கடன்கள் தீரும். அரசியல்வாதிகளுக்கு, ஏற்றம் தரும் காலகட்டம் இது. மாணவர்களுக்கு, சகமாணவர்களிடம் கவனமாகப் பழக வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: மஹாலட்சுமிக்குத் தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரியத் தடைகளைப் போக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் கிரகங்களின் கூட்டணியால் வீடு, மனை, வாகனம் தொடர்பில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். வெளிநாடுகளுக்குச் செல்ல முயல்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

கணவன் மனைவிக்குள் எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் குறித்த கவலை உண்டாகும். நிதானமாகச் செய்யும் பணிகள் வெற்றியைத் தரும். பெண்களுக்கு, பிறருக்குப் பொறுப்பேற்பதைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு, கூடுதல் கவனம் செலுத்திப் பாடங்களைப் படிக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வரக் கஷ்டங்கள் நீங்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதனின் சுயசார சஞ்சாரத்தால் வீணாக மனத்தை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரியத் தடங்கல் ஏற்படும். தொழில், வியாபாரம் சாதகமாக நடந்து முடியும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும்.

விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். பெண்களுக்கு, காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். கலைத் துறையினருக்கு, சுபச்செலவு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மாணவர்களுக்கு, புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம்.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: அம்பாளுக்கு முல்லை மலர் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

SCROLL FOR NEXT