ஆலயங்களில் விழாக்காலத்தில்தான் பக்தர்களுக்கு அருள் செய்ய உற்சவ மூர்த்திகளை மகா மண்டபத்தில் வந்து அமரச் செய்வது வழக்கம். ஆனால், குன்றத்தூரில் உள்ள திருமண வரம் தரும் காத்யாயனி அம்மன் கோயிலில் அம்மன் முன்பாக உள்ள முகூர்த்த மண்டபத்தில் கன்னியர் அரை மணி நேரம் அமர வேண்டும் என்னும் வித்தியாசமான வழிபாடு விதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இதற்கு `முகூர்த்த மண்டபம் அமர்தல்' என்று பெயர். நல்ல நேரத்திற்கு முகூர்த்தம் என்று பொருள். வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகளில் ஒருநாளை எடுத்துக் கொண்டு, மூன்று வாரங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்.
இந்த முகூர்த்த மண்டபத்திற்குள் அமரும் பெண்களுக்கு வெகு சீக்கிரமே திருமணம் கைகூடும் என்பது ஐதிகம். குன்றத்தூர் முருகன் கோயில் மலை அருகில் பிரியும் திருநீர்மலை சாலையில் இத்தலம் இருக்கிறது.
- கே.ராஜலட்சுமி, சென்னை.