இணைப்பிதழ்கள்

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை 40: நடப்பு நிகழ்வுகள்

செய்திப்பிரிவு

நடப்பு நிகழ்வுகள்

1. உலக வங்கியின் தலைவராக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பார் என அறிவிக்கப் பட்டுள்ளவர் யார்?

A) நியூ ஹாம்சயர் B) அண்டோரா

C) கிம் யோங் கிம் D) பான் கி மூன்

2. நாட்டிலேயே முதல் முறையாக மக்களின் மகிழ்ச்சியை உறுதி செய்வதற்காக ‘மகிழ்ச்சி துறை' என்னும் தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ள மாநிலம் எது?

A) ஆந்திர பிரதேசம் B) மத்திய பிரதேசம்

C) கேரளா D) கோவா

3. இந்தியாவின் முதல் வணிக நீதிமன்றம் மற்றும் வணிகத் தகராறு தீர்வு மையம் (Commercial court and Commercial Disputes Resolution Centre) எங்கு நிறுவப்பட்டுள்ளது?

A) ராய்ப்பூர் B) மும்பை

C) சென்னை D) கொல்கத்தா

4. ஜெயில் வார்டன் பணியிடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ள மாநிலம் எது?

அ) கேரளா ஆ) தமிழ்நாடு இ) ஒடிசா ஈ) ஹரியாணா

5. எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த முதல் தமிழக வீரர் யார்?

அ) மேஜர் வரதராஜன் ஆ) சிவக்குமார்

இ) மாரியப்பன் ஈ) உதயகுமார்

6. Tiangong-2 என்னும் விண்வெளி ஆய்வகத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ள நாடு எது?

A) இந்தியா B) அமெரிக்கா C) ரஷ்யா D) சீனா

7. ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் ஸ்பான்சராகத் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் எது?

A) ரிலையன்ஸ் B) விப்ரோ

C) அமுல் இந்தியா D) HCL

8. U-19 உலகக்கோப்பை 2016 கிரிக்கெட் போட்டி யில் சாம்பியன் பட்டம் வென்ற அணி.

A) இந்தியா B) இங்கிலாந்து

C) பாகிஸ்தான் D) மேற்கு இந்திய தீவுகள்

9. இந்தியாவின் சிறுதொழில் வளர்ச்சி வங்கியின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?

A) லக்னோ B) மும்பை

C) புதுடெல்லி D) சென்னை

10. ரெமி விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் எது?

A) கனவு வாரியம் B) விசாரணை

C) கும்கி D) சண்டைக்கோழி

11. 21வது சட்ட ஆணையத்தின் தலைவர்

A) பல்வீர்சிங் செளஹான் B) ஏ.பி.ஷா

C) ரவிதிரிபாதி D) பி.ஒய்.ரெட்டி

12. e-voter என்ற mobile app அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது?

A) ஆந்திரப் பிரதேசம் B) கர்நாடகா

C) கேரளா D) ஹரியாணா

13. முதலாவது தேசிய பழங்குடியினர் திருவிழா (First National Tribal Carnival) நடைபெற்ற இடம் எது?

A) புதுடெல்லி B) ஊட்டி

C) லூதியானா D) டார்ஜிலிங்

14. உலகின் முதல் வெள்ளைப் புலிகள் சரணாலயம் தொடங்கப்பட்டுள்ள இடம் எது?

A) சென்னை B) களக்காடு

C) மும்பை D) முகுந்த்பூர்

15. 8வது பிரிக்ஸ் (BRICKS) மாநாடு 2016 நடை பெற்ற இடம்

A) கோவா B) ஹைதராபாத்

C) போபால் D) ஜம்மு

16. இந்தியாவில் முதன்முதலில் ஆதார் ஏடிஎம் (ADHAR ATM) அறிமுகம் செய்துள்ள வங்கி

A) பேங்க் ஆப் பரோடா B) ஆக்ஸிஸ் பேங்க்

C) DCB பேங்க் D) யூகோ பேங்க்

17. Stand up India என்ற திட்டம் தொடங்கப்பட்ட இடம் எது?

A) புதுடெல்லி B) நொய்டா

C) ஹைதராபாத் D) லூதியானா

18. இந்தியா முழுவதுக்குமான அவசர உதவி தொலைபேசி எண்ணாக அங்கீகரிக்கப்பட் டுள்ள எண்.

A) 112 B) 104 C) 108 D) 100

19. 12வது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு எங்கு நடைபெற்றது?

A) பாகிஸ்தான் B) இந்தோனேசியா

C) மலேசியா D) இரான்

20. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி இணைக்கப்பட்ட ஆண்டு

A) 1990 B) 1986 C) 1994 D) 1998

21. சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் தொடங்கி வைக்கப்பட்ட மிகப் பெரிய உணவு பூங்கா அமைந்துள்ள மாநிலம்

A) தமிழ்நாடு B) அஸ்ஸாம்

C) மேகாலயா D) மேற்கு வங்காளம்

22. தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பிக்கும் வகை யில் ஒரு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு

A) அமெரிக்கா B) வங்காளதேசம்

C) இந்தியா D) இலங்கை

23. ஐ.நா.வின் புதிய செயலாளராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட அன்ட்னியோ குட்ரஸ்ட் எந்த நாட்டின் முன்னாள் அதிபர்

A) போர்ச்சுகல் B) பிரான்ஸ்

C) ஜெர்மனி D) உக்ரைன்

24. வரும் 2017-ம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளவுள்ள ஷேக் முகமது பி ஜாயிக் எந்த நாட்டின் இளவரசர்?

A) சவுதி இளவரசர் B) குவைத் இளவரசர்

C) அபுதாபி இளவரசர் D) கத்தார் இளவரசர்

25. என்.எல்.சி. இந்தியா (Neyveli Lignite Corpora-tion) நிறுவனத்துடன் ஒரு திறன் மேம்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள பல்கலைக்கழகம்

A) அண்ணா பல்கலைக்கழகம்

B) பெரியார் பல்கலைக்கழகம்

C) அண்ணாமலை பல்கலைக்கழகம்

D) சென்னை பல்கலைக்கழகம்

26. நாட்டின் முதலாவது மருத்துவப் பூங்கா எங்கு அமையவுள்ளது?

A) நாங்குநேரி B) ஸ்ரீ பெரும்புதூர்

C) செங்கல்பட்டு D) வாலாஜா

27. மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனம் சிப்பெட் (CIPET - Central Institute of Plastic Engineering & Technology) தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?

A) சென்னை B) கொல்கத்தா

C) மும்பை D) லக்னோ

28. சமீபத்தில் புதைநகரம் பற்றிய அரிய தகவல் கள் கீழடி கிராமத்தில் கண்டெடுக்கப்பட் டுள்ளன. கீழடி சார்ந்த மாவட்டம்

A) ராமநாதபுரம் B) சிவகங்கை

C) மதுரை D) தேனி

29. 2016-ல் ஜி-20 நாடுகளின் மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?

A) துருக்கி B) இந்தியா C) ரஷ்யா D) சீனா

30. Tuluni திருவிழா எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?

A) நாகாலாந்து B) மேகாலயா

C) திரிபுரா D) மணிப்பூர்

31. ரியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கம் வென்ற நாடு எது?

A) ரஷ்யா B) சீனா C) அமெரிக்கா D) இங்கிலாந்து

32. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு சோதனை முறையில் நடைபெற உள்ளது?

A) ராமநாதபுரம் B) கன்னியாகுமரி

C) திருச்சி D) காஞ்சிபுரம்

33. Yudh Abhyas எனும் இந்தியா அமெரிக்கா இடையிலான ராணுவப் பயிற்சி நடைபெற்ற இடம்

A) ஹைதராபாத் B) ராய்பூர்

C) உத்தரகாண்ட் D) டெல்லி

34. 7வது முறையாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய வீரர் யார்?

A) யோகேஷ்வர் தத் B) சானியா மிர்சா

C) மகேஷ் பூபதி D) லியாண்டர் பயஸ்

35. திருநங்கைகளுக்கு 3% இட ஒதுக்கீடு செய் துள்ள பல்கலைக்கழகம் எது?

A) பாரதியார் பல்கலைக்கழகம்

B) சென்னை பல்கலைக்கழகம்

C) திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைக்கழகம்

D) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

36. ரியோ ஒலிம்பிக் 2016-ல் தடை செய்யப்பட்ட தடகள அணி எந்த நாட்டைச் சேர்ந்தது?

A) ரஷ்யா B) மொராக்கோ C) இந்தியா D) சீனா

37. சர்வதேச கல்வியறிவு தினம் எது?

A) செப்டம்பர் 6 B) செப்டம்பர் 8

C) செப்டம்பர் 9 D) செப்டம்பர் 10

38. சந்திராயன் 2-ல் பயன்படுத்தப்படவுள்ள ராக்கெட்

A) GSLV MK-1 B) GSLV MK-II

C) GSLV MK-III D) GSLV MK-IV

39. ஆகார் யோஜனா திட்டம் கொண்டு வந்துள்ள மாநிலம் எது?

A) பீகார் B) ராஜஸ்தான் C) ஒடிசா D) ஆந்திரா

40. INDRA 2016 எந்த இரு நாடுகளிடையே நடைபெறும் ராணுவப் பயிற்சி

A) இந்திய - சீனா B) சீனா - ரஷ்யா

C) இந்தியா - ரஷ்யா D) இந்தியா - பாகிஸ்தான்

41. GST கவுன்சில் மாநாடு நடைபெற்ற இடம் எது?

A) டெல்லி B) கோவா C) மும்பை D) போபால்

A) கேரளா B) தமிழ்நாடு C) ஒடிசா D) ஹரியாணா

42. உலகின் மிகப்பெரிய ஆற்று தீவு மாவட்டம் "மஜிலி'' அமைந்துள்ள மாநிலம் எது?

A) அஸ்ஸாம் B) மணிப்பூர்

C) மிசோரம் D) மேகாலயா

43. பிரதமரின் இல்லம் அமைந்துள்ள ‘ரேஸ் கோர்ஸ் சாலை’யின் புதிய பெயர்?

A) லோக் கல்யாண் B) லோக் சம்ரித்

C) ஆம் ஆத்மி D) லோக் ஆத்மி

44. அஞ்சல் துறை புகார்களைத் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள எண் எது?

A) 1188 B) 1912 C) 1922 D) 1924

46. அமெரிக்க ஓபன் 2016 ஆண்கள் பிரிவில் பட்டம் வென்ற வீரர் யார்?

A) நோவோக் ஜோகோவிக் B) ஸ்டான் வாவ்ரிங்கா

C) ஆண்டி முர்ரே D) ரோஜர் பெடரர்

47. மியான்மர் இன் மோதல் தொடர்பாக ஏற்படுத் தப்பட்டுள்ள குழுவின் தலைவர்

A) லீ யூ வாங் B) கோபி அன்னான்

C) ரிச்சர்ட் ஹே D) ஜிம் பிங்

48. தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கை களுக்கு தனிச் சிறை அமைத்துள்ள சிறை எது?

A) வேலூர் சிறை B) புழல் சிறை

C) கோவை சிறை D) மதுரை சிறை

49. பிரேசிலின் தற்போதைய அதிபர் பெயர்

A) தில்மா ரூசெப் B) மால்கம் டர்ன்புல்

C) மிக்கெல் டெமர் D) ஆண்டினோ சார்ல்

50. வியாஸ் சம்மன் விருது 2016 வென்றவர் யார்?

A) ராகேஷ் ஜெயின் B) வசுந்தரா ராஜே

C) சுனிதா ஜெயின் D) ஷீலா தீட்சித்

விடைகள்:

1.C, 2.B, 3.A, 4.C, 5.B, 6.D, 7.C, 8.D, 9.A, 10.A, 11.A, 12.C, 13.A, 14.D, 15.A, 16.C, 17.B, 18.A, 19.B, 20.A, 21.D, 22.A, 23.A, 24.C, 25.C, 26.C, 27.A, 28.B, 29.D, 30.A, 31.C, 32.B, 33.C, 34.D, 35.C, 36.A, 37.B, 38.A, 39.C, 40.C, 41.A, 42.A, 43.A, 44.D, 45.D, 46.B, 47.B, 48.C, 49.C, 50.C.

டி. ஸ்டாலின்

இயக்குநர், ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி மேற்கு தாம்பரம், சென்னை

SCROLL FOR NEXT